பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G弹2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எனறும் வழங்குவர். குறுவெண்பாட்டிற்கு அளவு அளவடியும் கிந்தடியுமாகிய எழுசீராம் என்பர் ஆசிரியர். மேலும் இவற்றுள், ஒருபொருள் துதலிய வெள்ளடி இயலால் திரியின்றி முடிவது கலிவெண் பாட்டே." என்று ஆசிரியர் ஒதினமையால், புணர்தல் முதலாகிய பொருள் களுள் யாதானும் ஒரு பொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக்கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பசிபாடற்கு உறுப்பாப் வரிற் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். சமகிலை வெண்பாட்டு : நான்கடியால் வருவது சமநிலை வெண்பாட்டு அல்லது சமநிலை வெண்பா எனப்படும். அவற்றுள் இரண்டாமடியின் இறுதிக்கண் ஒரு உத் தொடை பெற்று வருவதை கேரிகை வெண்பா எனவும், ஒரூஉத் தொடை பெறாது வருவதை இன்னிகை வெண்பா எனவும் வழங்குவர். சமநிலை வெண்பாவை *அளவியல் வெண்பா' என்று வழங்குதலும் உண்டு. அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லை ஆறடி : சிற்றெல்லை கான் கடி. அளவியல் வெண்பா சிறப்புடைத்தாதல் கோக்கிப் பதினெண்கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள் ளும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தா பிற சான்றோரும். கைக்கிளை கைக்கிளை என்பது, கைக்கிளைப் பொருண்மை. இப்பொருண்மைத்தாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனப்படும். கைக்கிளை, ஆசிரியப்பாவினால் வரப்பெறாது. அங்ங்ணம் வரின் அது பாடாண்பாட்டுக் கைக்கிளை ஆகும். மேலும், கைக்கிளைப் பொருண்மை வெண்பாவாக வருதலேயன்றி, முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரப்பெறும் என்று விதி செய்வர் ஆசிரியர். . இவ்வாறு வருவதனை மருட்பா என வழங்குவர். இக்கருத்தினானே ஆசிரியரும், - . 10. செய்யு நூற். 151 (இளம்.) 11. ை நூற். 115 (இனம்.)