பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பாவின் வகை 3委笠 மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னுங் தன்மை யின்றே. * என்று ஒதினார் என்பது ஈண்டு அறிதற்பாலது. பரிபாட்டு பரிபாட்டாவது, பரிந்து (பல அடிகளும் ஏற்று) வரும் பாட்டாகும். அஃதாவது, ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பல உறுப்புகளோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப்பெறுவது. பரிபாடல், வெண்பா உறுப்பான் வருதலேயன்றித் தொகை கிலையும் விரியுமாகக் கூறிய பா தான் கனுள் இன்ன பா என்று அறியப்படும் இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு கிற்றத் கும் உரியதாகும் என்பர் ஆசிரியர். பொதுப்பட பாக்கப்பட்டு கிற்றலாவது ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி மருட்பா என்று ஒதப் பட்ட எல்லாப் பாவின் உறுப்பும் உடையதாதல். இங்ஙனம் பொதுவாய் கிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட கான்கும் தனக்குறுப்பாகக் காமப் பொருள் குறித்து வரும் நிலையினதாகும் இது. மேலும், சொற் சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரியவை என்பர் ஆசிரியர். 'கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும். ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகைபடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக உடைத்தாகி வெண்பாவியலால் புலப்படத் தோன்றுவது. இவற்றுள், சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும்' என வேறு ஒதுதலின், ஏனை நான்குங் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும” என்பர் இளம்பூரணர். “கொச்சகம் என்பது ஒப்பினாகிய பெயர் : ஒராடையுள் ஒரு வழியடுக்கியது கொச்சகம் எனப்படும் அது போல ஒரு செய்யுளுட் பல குறள் அடுக்கப்படுவது கொச்சகமெனப்பட்டது' என்று கூறுவர் பேராசிரியர். பல கோடுபட அடுக்கி புடுக்கும் 12. செய்யு. - நூற். 81 (இளம்.) 13. ை- நூற். 115 (இளம்.) 14. .ை - நூற். 117 (இளம்.) 15. ை- நூற். 118 (இளம்.) 16. .ை - நூற். 121 (பேரா.)