பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. என்பர் ஆசிரியர். எனவே, இரண்டடி இரண்டும், ஒரடி கான்கும், இருசி எட்டும், ஒரு சி பதினாறும் ஆகி எண் பல்கும் என்பது. இருசீர் குறளடியுமாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும்; ஆகவே, ஒழித்த எண் மூன்றும் தலையெண்ணும் இடை பெண்ணும் கடையெண்ணும் என மூன்றுங் கூடியே எண்னெனற் குரியனவாயின. இது கோக்கிப் போலும் எண்ணென்று அடக்காது, சின்ன மல்லாக் காலை (செய் - நூற் - 146) என ஒரு சீரினை வேறுபடுத்து மேற்கூறுகின்றதென்பது. இனி அளவடியினை காட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்கும்’ என் றமையின், அளவடியிற் சுருங்கின. இருசீரும் ஒரோவழிச் சின்ன மெனப்படும்’ என்பர பேராசிரியர்.

  • இனி, ஈரடியிரண்டினைப் பேரெண் எனவும், ஒரடி அத்ணிற். குறைதலின் சிற்றெண் எனவும், இவற்றிற்கும் பின் வரும் சின்னத் திற்கும் இடையே நிற்றலின் இருசிரை இடையெண் எனவும், முடி விற்கு அளவாய் கிற்குஞ் சின்னத்தினை அளவெண் எனவும் பெயர் கூறினும் அமையும்’ என்பர் கச்சினார்க்கினியர்.

இனி, ஒரு போகு என்ற கலியின் இயல்பும் இரண்டு வகைப் படும். அவை ; கொச்சக வொருடோகும், அம்போதரங்க வொரு போகும் என இரண்டாக உணரப்படும், ஒரு போகு" என்ற தொடர் ஒர் உறுப்புப் போகியது (இழந்தது) எனப் பொருள்படுவ தாகும். ஒத்தாழிசைக் கலிக்கு ஒதிய உறுப்புகளுள் ஒருறுப்பு இழிங் தமையால் ஒரு போகு" எனப் பெயராயிற்று. 'ஒருறுப்பு இ9த் தலின் ஒருபோகாதல் ஒக்குமாயினும்’ என்று பேசாசிரியர் கூது தலால் (செப். நூற் 147-இன் உரை) இப்பெயர்க்காரணம் ஒரு வாறு புலனாதல் காணலாம். கொச்சகம் ஒருவழி வாராதது கொச்சக வொரு போகு ஆகும், வண்ணகப் பகுதிக்குரிய எண் ணுறுப்பு (அம்போதரங்கம்) ஒரு வழியில்லாதது அம்போதரங்க. வொருபோகு எனப் பெயர் பெற்றது. கொச்சகவுடை போலப் பெரும்பான்மையும் திரண்டு வருவது கொச்சக மெனவும், பல வுறுப்புகளும் முறையே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் கடைக் கண் விரிந்து நீர்த்தாங்கம் போறலின் அம்போதரங்கம்’ எனவும் கூறினார்' என்று கச்சினார்க்கினியர் குறிப்பிடுவது காண்க. கொச்சக வொருபோகு தரவு முதலாயின உறுப்புகளுள் தரவின்றித் தாழிசை பெற்றும், தாழிசையின்றித் தரவு முதலியன