பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அதன் பேரெல்லை நூற்றிருபதாமெனவும் கொள்ள வைத்தா னென்பது” எனவும் விளக்குவர் பேராசிரியர். மேற்கூறிய உறுப்பு களே பரிபாடற்கும் உறுப்புகளாமாயினும், இவை இம்முறையே வரின் அம்போதசங்க வொருபோகாம் எனவும், அறுபதடியிற் குறைந்து முறை பிறழ்ந்து வருவனவும், ஒத்து அறுபதடியின் மிக்கு வருவனவும் பரிபாடல் எனக் கொள்ளத்தக்கனவாம் எனவும் இவற். றிடையே யடைந்த வேறுபாட்டினை விளக்குவர் இளம்பூரணர்.: இவற்றுள் அராகம் என்பது, அறாது (இடையறவு படது) கடுகிச் செல்லுதல்; மாத்திரை நீண்டும் இடையறவு பட்டும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுவது அராகம் என்னும் உறுப்பாகும். மேற்கூறியவற்றால் கலிப்பாவின் விகற்பங்களை அடியிற் கண்டவாறு ஆசிரியர் கூறியிருப்பது உணரப்படும். éso

- |G) |o (3) ; (4) - l { ஒத்தாழிசைக் கலி கலிவெண் கொச்சகக் உறழ் கலி

பாட்டு கலி —— (1) | (2) முதல்வகை இரண்டாம் வகை


– (1) | (2) வண்ணகம் ஒருபோகு Tஅம்போதரங்கம்) - |

i - | (1) | (2) கொச்சக வொருபோகு அம்போதரங்க வொருபோகு இவற்றுள் ஒத்தாழிசைக் கலியின் விகற்பங்கள் மேலே, விளக்கப்பெற்றன. ஏனையவற்றை இனிக் காண்போம். - கலிவெண்பாட்டு : ஒரு பொருளைக் குறித்துத் தொடுக்கப் பட்ட வெள்ளடியியலால் திரியின்றி முடிவது கலிவெண் பாட்டாகும்.* 30. செப்பு - நூற். 146-இன் உரை. 31. வெண்கலிப்பாட்டு என்பது இதன் மற்றொரு பெயர்.