பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவின் வகை 3ざ蓋 ஒருபொருள் துதலிய வெள்ளடி இயலால் திரியின்றி முடிவது கலிவெண் பாட்டே." என்பது தொல்காப்பிய நூற்பா, செப்பலோசையிற் சிதையாது ஒரு பொருள்மேல் வெள்ளடியால் வெண்பா முடியுமாறு முடிவன கலிவெண்பா என்னும் சிறப்புடையன என்பது ஆசிரியர் தொல் காப்பியர் கருத்தாகும் என்று கூறுவர் யாப்பருங்கல ஆசிரியர், இளம்பூரணரும், வெள்ளடியால் என்னாது வெள்ளடியியலான்" என்றமையால், வெண்டனையால் வந்து ஈற்றடி முச்சிராப் வருவனவும், பிற தளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும் கொள்ளப்படும்" என்பர். இவற்றுள் வெண்டனையால் வந்த செய்யுள் வெண்கலிப்பா' எனவும், அயற்றளையால் வந்த செய்யுள் கலிவெண்பா எனவும் இவர் உரையில் குறிப்பிடப் பெற்றுள்ளன. கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி முச்சீரான் முடிவதனை வெண்கலிப்பா’ எனவும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருள்மேல் வருவதனைக் "கலிவெண்பா' எனவும் பெயரிட்டு வழங்குவர் குணசாகரர்க9. பாப் பருங்கல விருத்தியாசிரியரும், வெள்னோசையினால் வருவதனைக் கலிவெண்பாவென்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண் கலிப்பா என்றும் வேறுபடுத்துச் சொல்வாகும் உளர்’ என்று கூதுவர். மேற்கூறியவற்றைக் கூர்க் து கோக்கின் வெண்டனையால் வந்ததனைக் கலிவெண்பா எனவும், பிற தளையால் வந்த தனை வெண்கலிப்பா எனவும் வழங்கும் பெயர்வழக்கே பொருத்த முடையதெனத் தெரிகின்றது. கொச்சகக் கலி : தரவாகிய உறுப்பும் சுரிதகமாகிய உதுப்பும் இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடுக்கியும் ஆறு மெப் பெற்றும் வெண்பாவின் இயல்பினால் புலப்படத் தோன்றும் பா கிலை வகை கொச்சகக் கலிப்பா வாகும். இதன் இயல்பினை, தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாகிலை வகையே கொச்சகக் கலியென நூல்கவில் புலவர் துவன்றறைக் தனரே.* என விதி செய்து காட்டுவர் ஆசிரியர். ஆறு மெய் பெறுதலாவது, 32. செய்யு. - நூற்பா 147 (இளம்.) 33, யாப் - காரிகை 3.2-இன் உரை. 34. செய்யு - நூற்பா 148 (இளம்,