பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வளர்ச்சி 35ア என்றும் வழிகாட் வளங்கொழிக்கச் பல புதிய துறைகள் கள் நடத்திப் புது நூல்

ைகளில் ஆய்வு

بمصر o - தம்

;

என்பது முதல் நான்களைப் பெருக்குவதற்குப் பாரதியார் காட்டும் வழியாகும். இவ்வாறு தமிழ் மொழியில் முதல் நூல்களையும், வழி நூல்களையும் பெருக்கித் தமிழ் மொழியை உரமாக்க வேண்டும். பிறகாட்டுச் செல்வங்களைக் கொணர்ந்து வீட்டுச் செல்வத்தைப் பெருக்க வேண்டியது. ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் ஆசிரியர் நூன் மரபுபற்றிச் செய்யுளியலிலும் மரபியலிலும் காணப் பெறும் நூற்பாக்களை ஒப்பவைத்து நோக்கின் இவ்விருவகை நூற்பாக்களும் சொல் கடையாலும் பொருளமைப்பாலும் தம்முள் வேறுபடுகின்றனவென்றும், ஆகவே இவை தோல்காப்பியனாத காலத்திற்குப் பின்பு இயற்றப்பெற்று வழங்கியவை என்றும், பிற்காலத்தவரால எல்லா நூற்கும் உரிய பொதுப்பாயிரமாகத் தொல்காப்பியத்தின் இறுதியில் சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும் எனவும், பின்வந்த உரையாசிரியர்கள் இவற்றையும் தொல்காப்பிய சின் வாய்மொழியெனவே கொண்டு உரையெழுத நேசந்ததெனவும் எண்ணுதற்கு இடமுள்ளது என்றும் செய்யும் ஊகம் மிகவும் பொருத்தமென்றே தோன்றுகின்றது. இதனை வலியுறுத்த கன்னுரி லின் மயிலைநாதர் உரையிலிருந்து அவர் காட்டும் சான்று இதனை மேலும் நன்கு வலியுறுத்துகின்றது. எனினும், நூலின் பொது இலக்கணத்தைக் கூறும் நூற்பாக் களையும், நூலின் அமைப்பினைக் கூறும் நூற்பாவையும் வேறு பிரித்து உணரவேண்டும் என்பது ஈண்டு அறியத்தக்கது. செய்யு ளியலில் நூலின் இயல்பும், நூற் பாகுபாடுகளும் பாகுபாடுகளின் இலக்கணமும் கூறப்பெற்றுள்ளன : மரபியலில் நூலின் இலக்கண மும் நூலின் வகைகளும் அவ்வகைகளின் இலக்கணமும், உரை வகைகளும் பிறவும் கூறப்பெறுகின்றன. 34. வெள்ளை வாரணனார், க தமிழ் இலக்கிய வரலாறு. தொல்காப்பியம், பக்கம் (305 - 3C6}.