பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள்-(2) - - 36& செய்யுளியல் 181 முதல் 187 முடியவுள்ள நூற்பாக்களில் விரித் துரைக்கப் பெறுகின்றது. பார்ப்பான், பாங்கன், தோழி. செவிலி, தலைவன், தலைவி என்று சொல்லப்பெற்ற கலந்தொழுகும் மரபினையுடைய அதுவகை யோரும் களவு என்னும் ஒழுகலாற்றில் கூற்று கிகழ்த் துவதற் குரியவர். பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்னும் அறுவரும் முற்கூறிய அறுவருடன் கற்பு என்னும் ஒழுகலாற்றில் கூற்று நிகழ்த்துவதற்குரியவர்." தலைமகள் வாழும் ஒரே ஊரில் உள்ளவர்கள். அவளது அயல்மனையில் உள்ளார், கேரியில் உள்ளார், அவளது கோயின் கூறுபாட்டினைக் குறிப்பினால் அறிவோர். தங்தை, தமையன் ஆகிய இன்னோர் கூற்றாகப் பிறர்கொண்டு கூறின் அல்லது இவர் தாமே கூறினாராகச் செப்யுன் செய்தல் இல்லை. ை டு. எந்தையும், - கிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும்" எ ன் ற அகப்பாட்டடிகள் (அகம் 13) தங்தையுட்கொண்டு கூறியனவாக வந்துள்ளதைக் காண்க, தலைவனொடும் தலைவியொடும் கற்றாய் (அவளைப் பெற்ற தாய்) கூறியதாகக் கூறும் வழக்கம் இல்லை. எனவே, கற்றாய் ஏனையோரை நோக்கியே கூறுவாள் என்பது பெறப்படும். கற்றாப், செவிலி, தோழி என்னும் இவர்களோடும் தலைவனொடும் தலவிையோடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியலில் கண்ட வழக்கம் ஆகும். எ டு. வில்லோன் காலன கழலே தொடியோள் கெல்லடி மேலன சிலம்பே. என்ற குறுந்தொகையடிகள் (குறுங் - 7) செவிலிக்குக் கண்டோர் கூறியனவாக அமைந்திருத்தல் காண்க. தலைவியை உடன்கொண்டு போகும் இடைச்சுரத்தின் கண்ணே, தலைமகன் உலகியல் கெறியை உளங்கொண்டு தனது

  • இதன் விளக்கத்தை இவ்வாசிரியரின் அகத்திணைக் கொள்கைகள் (இயல். 23, 24, 25) (பாரி கிலையம், சென்னை. 1(8) என்ற நூலில் காண்க.

4. செய்யு. நூற். 184 (இளம்.) தொல்.-24