பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருள் உலகம் 17. உனிப்பொருள் உரிப்பொருளாவது, மக்களுக்கு உரிய பொருள். அதை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் தமிழ் இலக்கணம் விரித்துப் பேசும். அகப்பொருள் என்பது, காதல் சம் பந்தமான செய்திகளைக் கூறுவது. போக நுகர்ச்சி செய்தவர்கள் மட்டும் மனத்தால் அறியக்கூடியதாதலால் அஃது அகம் என்று பெயரிடப்பட்டது. புறப்பொருள் என்பது, மறச்செயல்களையும அறச்செயல்களையும் இன்னோரன்ன பிறவற்றையும் கூறும் பகுதி. இவை பிறர்க்கும் புலனாக இருத்தலால் புறம் என்று குறியீடு செய்யப்பெற்றது. சான்றோர் பாடல்கள் இன்பப் பகுதிபற்றி எழுந்த பழைய சான்றோர்களின் பாடல்களில் ஐக்திணை வகையாகிய முதல், கரு, உரி ஆகிய முப்பொருள்களும் சிறப்பாக அமைந்திருத்தல் காண லாம். இவற்றுள் முதற்பொருளினும் கருப்பொருளும் கருப் பொருளினும் உரிப்பொருளும் சிறப்புடையனவாகும். அஃதாவது அகப்பொருள்கள் பற்றிய பாடல்களில் உரிப்பொருளாகிய புணர் தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் இல்லாமற் பாடப்பெறுமாயின் அப்பாடல்கள் பொருட்பயனற்றனவாகக் கருதப்பெறும் கருப் பொருள்கள் மட்டிலும் பாடல்களில் அமைந்தால், அப்பாடல்கள் அடுத்தபடி சிறப்பாகக் கருதப்பெறும். மூன்று வகைப் பொருள் களும் ஒரு பாடலுள் அமைத்துப் பாடப்பெறுமாயின் அது பொருட் சிறப்புடன் விளக்கமுற்றுத் திகழும். முல்லை நறுமல ரூதி யிருந்தும்பி செல்சார் உடையார்க் கினியவாய் - கல்லாப்! மற் றியாருமில் நெஞ்சினே மாகி புறைவேமை யீரு மிருண்மாலை வக்து.49 என்ற வெண்பாவில் மூன்று வகைப் பொருள்களும் வந்துள்ளன. இது பருவங்கண்டு வருந்திய தலைமகளுக்குத் தோழி கூறுவதாக அமைந்துள்ளது. வண்டுகள் முல்லை மலரை ஊதும்படி இருண்டு வரும் மா ை ல க் காலமானது க ன வ ரு ட ன் உறையும் மகளிர்க்கு இன்பம் த ரு வ த யி னு ம், அவரைப் பிரிந்து வாழும் நமக்குத் துன்பம் தருவதாக உள்ளது” என்று கூறுகின்றாள் தோழி. இதில் கணவனைப் பிரிக் து தலைவி தனித்துறைதல் கூறுப்பெறுதலால் இருத்தல் என்ற முல்லைத் திணையின் உரிப்பொருளும், முலலைப் பூ என்ற அதன் கருப் பொருளும், மாலைப்பொழுது என்ற அதன் முதற்பொருளும் வந்து 10. ஐந்தினையைம்பது - செய் 6. தொல்.-2