பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள்-(2) - 尝@? என்பது தொல்காப்பிய நூற்பா. இவை எல்லாச் சாதியாச்க்கும் ஒப்பச் செல்லும் ஊரும் பெயரும் சார்த்திச் சொல்லப்பெறு வதற்கு எடுத்துக்காட்டுகளாக உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகன், கடியலுகர் உருத்திரங்கண்ண னார் என்பவற்றை அந்தணர்க்குரியனவாகவும்; உறையூர்ச்சோதின் மதுரைப்பாண்டியன் என்பன அரசர்க்குரியனவாகவும் : காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். மதுரை அறுவை வாணிகன் இன வேட்டனார் என்பன வணிகர்க்குரியனவாகவும் : அம்பர் கிழான் காகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியனவாகவும் கூறுவர் பேராசிரியர். இன்றும் ஆர்க்காட்டு இலக்குமணசாமி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார், திருவாரூர் கலியான சுக்தரனார் போன்ற வழக்காறுகள் இருப்பதை அறிக. இசிை யறிஞர்கள் தம் பெயரை ஊர்ப் பெயருடன் சேர்த்தே வழங்குவது இன்று எங்கனும் பெருவழக்காக உள்ளது. மேலும், உடைத் தொழிற்கருவியாக, அந்தணாளர்க்குச் சுருவையும் (கெய்த்துடுப்பு) சமிதை குறைக்குங் கருவியும் முதலாயினவும் : அரசர்க்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயினவும் வணிகர்க்கு நாவாயும் மணியும் மருத்தும் முதலியனவும் ; வேளாளர்க்கு காஞ்சிலும் சகமும் முதலாயினவும் உரியனவாகக் காட்டுவர். தலைக் குணம்படச் சொல்லுஞ் சொல்லும் அவரவர்க்குரிய கிலைமைக்கேற்ப கிகழ்த்தப்பெறும். தலைமைக் குணச்சொலுக் தத்தமக் குரிய நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப. . 'எனவே, இறப்ப உயர்தல் இறப்ப இழிதல் ஆகாதென்றவாறாம்" என்பர் இளம்பூரணர். பேராசிரியரோ "அக்தனர் தலைமைக் குணம் கூறுங்கால் பிரமனொடு கூறியும், அரசரை மாயனொடு கூறியும், வணிகரை நிதியின் கிழவனொடு கூறியும், வேளாண் மாந்தரை வருணனொடு கூறியும் தலைமைக் குணச்சொல் கிகழ்த்தப்படும். அவையெல்லாம் அவரவர் செய்யுளுட் கண்டு கொள்க’ என்று உரை எழுதுவர். . படைத்தொழிலுக்குரியவர்கள் அரசரும் வணிகருமேயாவர் : அக்தணரும் வேளாளரும் இதற்கு உரியவரல்லர். இடையிரு வகையோ ரல்லது காடிற் படைவகை பெறாஅ என்மனார் புலவர்.' 11. மரபி. - நூற். 76 (இளம்.) 12. .ை நூற். 77 (இளம்.)