பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 427 சார்ந்த இடமும், கடலும் கடல் கார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும் சில கால வரம்புகளுடன் கல்ல சூழ்நிலைகளாக அமைகின்றன என்று நாடக வழக்காக அமைத்துக் காட்டுகின்றது இந்நூல். அன்பினைக்திணையாகிய அகவொழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும். உருவும் திருவும் உணர்வும் முதலிய பண்புகளால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் கல்லூழின் வலியால் தாமே எதிர்ப்பட்டு, அன்பினால் ஒருவரையொருவர் இன்றியமை யாதவராப், உலகத்தார் அறியாது மறைக்தொழுகுதல் களவாகும். களவு என்பது, "பிறர்க்குரிய பொருளை மறையிற் கோடல் : மறைவில் கிகழும் ஒழுகலாறு என்ற பொருளிலேயே இச்சொல் வழங்குகின்றது. இந்த ஒழுகலாற்றில், இருவனுள்ளத்தும் உள் கின்று சுரக்த அன்பின் பெருக்கினால், தான், அவன்” என்னும் வேற்றுமையின்றி, இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப் புணர்ச்சியே நடைபெறும். இங்கனம் மறைந்தொழுகுதலைத் தவிர்த்து, பெற்றோர் உடன்பாடு பெற்று, இருவரும் உலகத்தார் அறிய மணஞ்செய்துகொண்டு மனையறஞ்செய்தலே கற்பு’ என வழங்கப்பெதும். இது களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும். ஒருவன் ஒருத்தி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினால் கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கையுடையாரா யொழுக, மற்றவர் அவரது அன்பின் திறத்தை புணர்ந்துகொள்ள முடியாத நிலை கைக்கினை எனப்படும். கை - பக்கம் கிளை - உறவு. ஒரு பக்கத்து உறவு என்பது இதன் பொருள் : அஃதாவது, ஒருதலைக் காமமாகும். ஒருவனும் ஒருத்தியும் தம்முள் அன்பில்லாதவராய் இருக்தும் கணவனும் மனைவியு மெனப் பிறராற் பிணைக்கப்பட்டு அன்பின்றிக் குடும்பம் நடத்தும் முறை பெருந்திணை என்று பேசப்பெறும். பெருக்திணை என்பது, பொருந்தாக் காமம். இத்தகைய உள்ளம் பொருந்தா வாழ்க்கை உலகியலில் பெரும்பான்மையாகக் காணப்பெறுவதால் இதனைப் பெருந்திணை என்று பெயரிட்டு வழங்கினர் முன்னையோர். இந்த இருவகையொழுக்கங்களும் எல்லா இடங் களிலும் எல்லாக் காலங்களிலும் நடைபெறக்கூடுமாதலின், இவற்றிற்கு ஆசிரியர் தனிச் சூழ்நிலை அமைத்துக் காட்டவில்லை. மேலும், இக்த இருவகையொழுக்கங்களையும் ஆசிரியர் விரும்ப வில்லையாதலின், அதனை அவர் விரிவாக எடுத்தோதவில்லை என்பதும் அறியத்தக்கது. அன்றியும், இவையும் வெளியில் சொல்ல முடியாத அகவொழுக்கங்களாகவே கருதப்பெற்றனவாதலின், இவையும் அகவாழ்வுடன் இணைத்தே பேசப்பெற்றன.