பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

争23 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை புறவாழ்வு : அரசியல், வாணிகம், உழவு, ஏனைய தொழில் கள் ஆகியவை யாவும் புறத்திலே நிகழ்வன. ஒவ்வொருவரும் இவற்றைப்பற்றிப் புறத்தார் உணரும்படி உரைத்தல் இயலும். இங்ங்ணம் எல்லோரும் அறியும்படி சொல்லவும் செய்யவும் கூடிய செய்திகள் எல்லாம் புறடபொருளில் அடங்கும். புறத்திலே நிகழும் ஒழுக்கம் புறத்தினையாகும். இதுவே புறவாழ்வாகும். இப்புற வொழுக்கங்களை மேற்கொள்ளுவதற்குரிய வரம்பே அரசியல் ஆகும். ஒருவர் வாழ்வில் மற்றவர் குறுக்கிட்டுப் பூசல் விளைவிக்கும் குழப்ப நிலையைத் தடுத்து, மக்களுள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பிய குற்றமற்ற இன்பங்களை இனிது அடையுமாறு செய்ய வல்ல செயல் முறைகளை அரசியல் பொறுப்பேற்று நடத்தும். பண்டைத் தமிழரின் அரசியல் வாழ்வில் மன்னனே குை மதிக்கத் தக்க தலைவனாகத் திகழ்ந்தான். இந்த மன்னற்கு இன்றியமை யாது வேண்டப்பெறுவனவாகிய கல்வி, வீரம், புகழ், கொடை முதலிய பெருமிதப் பண்புகள் யாவும் எல்லோர்க்கும் இன்றியமை யாதனவாகும். இந்தச் செய்திகள் யாவும் புறவாழ்வில் அடங்கும். அகத்திணையை ஏழாக வகுத்ததுபோலவே புறத்திணையை யும் ஏழாக வகுத்துக் கூறுவர் கொல்காப்பியர். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்தினைகளாகும். போர் புரியக் கருதிய வேந்தன் மாற்றாரின் ஆனிரையைக் கவாவதும், அங்ங்ணம் கவர்ந்தவற்றை அவற்றிற்குரி யோர் மீட்டுக்கொள்ளுவதும் வெட்சித்திணையாகும். ஒரு மன்னன் தன் பகைவனுடைய காட்டைக் கைப்பற்றிக்கொள்வான் வேண்டித் தண்டெடுத்துச் செல்வதும், பகைவேக் தன் அவனை எதிர்ப்பதும் வஞ்சித்தினையாகும். படை எடுத்துச் சென்ற அரசன் மாற்றா னின் கோட்டை மதிலை வளைத்துக்கொள்வதும், உள்ளிருக்கும் வேந்தின் அம்மதிலைக் கைவிடாமல் காப்பதும் உழிஞைத் திணை யாகும். ஒாசன் தனது காட்டின் மீது தண்டெடுத்தும் போக்த வேந்தனை எதிர்த்துப் போருடற்றி அவனுடைய வலிகையை அழிப்பது தும்பை த தினையாம். பகைவரை வெல்லுதலும், ஒவ்வொருவரும் தத்தம் செயல்களை வெற்றி பெறச் செய்தலும், வாகைத் திணையாகும். உலகம், இளமை, செல்வம் முதலிய வற்றின் கிலையாமையைப்பற்றியும், மற்றும் பல அறிவு:ைகளை யும் எடுத்தியம்புவது காஞ்சித்திணையாகும். மக்கள், கடவுள், ஒழுக்கம், வீரம், புகழ், கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணையாகும். இந்த எழு திணைகளிலும் பண்டைக் காலத்தில் நடைபெற்ற போர் முறைகளைக் காணலாம் : போரில் தமிழர்கள் காட்டிய வீரச் செயல்களை அறியலாம். தமிழரின் அரசியல், கொடை, புகழ் முதலியவற்றை உணரலாம்.