பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

安宮会。 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மொழிகளும் தமிழ் மொழியுடன் கலந்துள்ளன. ஆரியர் வந்த பொழுது ஆரியச் சொற்களும் இஸ்லாமியர் வந்தபொழுது அறபு மொழிச் சொற்களும், ஆங்கிலேயர் வந்தபொழுது ஆங்கில மொழிச் சொற்களும் கலந்தன. இவை யாவும் தமிழ்மொழியின் ர்ேமையைக் கெடுத்துவிடவில்லை : தமிழின் உருவத்தைக் குலைத்துவிடவும் இல்லை. தமிழில் பிறமொழிச் சொற்கள் வருங்கால் அவை தமிழ்க்கோலம் பூண்டு கலக்க வேண்டும் என்று தமிழ் இலக்கணம் வரையறை செய்தது. ராஜா என்ற சொல் அரசன்’ என்றும், லோக என்பது உலகம் என்றும், ரூபம்’ என்பது உருவம் எனவும் வழங்கலாயின. கவிஞர் கோமான் கம்பனும் ஹனுமான்' என்பதனை அநுமன் என்றும், ராமன்’ என்பதனை இராமன் என்றும், இலட்சுமணன்' என்பதனை இலக்குவன்’ என்றும், "லங்கா’ என்பதனை இலங்கை’ என்றும் வழங்குவதை அறிக. உயிருள்ள மொழிகள் வளர்ந்துகொண்டே இருக்கும். பழைய சொற்கள் வழக்கு வீழ்தலும், புதிய சொற்கள் தோன்றி வழக்கு எற்படுதலும் இயல்பு. இதனைத்தான் பவணந்தியார், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே." என்று குறித்தார். பிறமொழிச் சொற்கள் தமிழிலே கலப்பதைப் பற்றித் தொல்காப்பியர் தெளிவாகக் கூறியுள்ளார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.' என்ற விதியினால் இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என்ற நான்கு வகைச் சொற்களும் செய்யுள்களிலே சேரந்து வரலாம் என்று கூறுவர். இதில் திசைச்சொல்லும் வட சொல்லும் செய்யுளில் சேர்ந்து வரலாம் என்பது உணரத்தக்கது. இயற்சொல் என்பது, எல்லோருக்கும் பொருள் விளங்கும்படி வழக்கத்திலுள்ள சொல்லாகும். திரிசொல் என்பது, பேச்சு வழக்கில் பெரும்பான்மையாக வழங்காமல் இலக்கிய வழக்கில் மட்டிலும் உள்ள சொல். திசைச்சொல் என்பது, செக்தமிழ் காட்டை அடுத்திருக்கும் பன்னிரண்டு காடுகளிலும் வழங்கும் சொற் கிள் என்பர். தொல்காப்பியர். வடசொல் என்பது, வடமொழிச் சொல். பிற மொழிச் சொற்கள் தமிழில் கலக்கக்கூடாது என்ற குறுகிய கோக்கம் தமிழர்களிடம் இல்லை என்பது அறியத்தக்கது. 74. கன்னூல் நூற். 462. 75. தொல். - சொல். - எச்ச - நூற். 1.