பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3G தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எத்தனையோ வடிவங்கள் கொள்வதை நாம் பார்க்கவில்லையா ? அதுபோலவே, காதல் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஒன்றேயானாலும் முதல், கருப் பொருள்களின் வேறுபாட்டாலும் சொல்லமைப்பு களின் வேறுபாட்டாலும் கவிஞர்கள் பல வகையான கற்பனை களைப் படைத்துக் காட்டுகின்றனர். அதனால்தான் அகப்பொருள் சம்பந்தமானபாக்களை எராளமாக அவர்கள் பாடித் தள்ளியுள்ளனர். மேலும் பாடிக் குவிப்பதற்கும் அத்துறை விரிந்து கொடுக்கின்றது. ஐந்தினை மாந்தர் : ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள் அறிவும் செல்வமும் உடைய நல்ல குலத்தில் பிறந்தவர்கள். இங்கு எக்காரணத்தாலும் இழிந்த மரபினரைக் காண்டல் அரிது. ஐக்திணை ஒழுக்கமாகிய புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இாங்கல் என்பன எல்லா கிலத்து மக்களுக்கும் பொதுவான செயல்களே. என்றாலும், மலை நாட்டில் புணர்தல் நிகழ்வதாகக் கூறுவது இலக்கிய மரபு. இவ்வாறே பாலை நிலத்தில் பிரிதல் நிகழ்வதாகவும், காடு சார்ந்த நிலத்தில் இருத்தல் நிகழ்வ. தாகவும், வயல் சூழ்ந்த நிலத்தில் ஊடல்நிகழ்வதாகவும், கடற்கரைப் பகுதியில் இசங்கல் நிகழ்வதாகவும் இலக்கணம் வகுக்கப்பெற். துள்ளது. இந்த முறையில் கூறினால்தான் சிறப்பு என்பதை எண்ணியே பண்டைய ஆசிரியர் ஒழுக்கத்தின் பெயர்களையே கிலத்திற்கும் கொடுத்தனர். எடுத்துக்காட்டாக, குறிஞ்சி ஒழுக்கம் கிகழும் இடம் குறிஞ்சி நிலம் : இம்மாதிரியே பிறவற்றிற்கும். கூறப்படும். அந்தந்த நிலத்தில் அக்தங்தச் சூழ்நிலைகளில் அந்தந்த, ஒழுக்கந்தான் கடைபெற வேண்டும் என்று வரையறை செய்த கருத்துதான் பாது என்பதை ஆராய்வோம். மலைசார்ந்த இடம் : ஐந்து திணைக்கும் உரிய பொருளைத் தொல்காப்பியர், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை தேருங் காலைத் திணைக்குறிப் பொருளே.2 என்று குறிப்பிட்டுள்ளார். மலையையும் மலை சார்ந்த இடத்தையும் பண்டையோர் புணர்ச்சிக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிஞ்சி இயற்கை வளம் செறிந்தது. மஞ்சு சூழ் மலையில் ஆசினியும் அசோகும் மலையை அழகு செய்யும் : தேமாவும் தீம்பலவும் மலைக்குத் தெய்விகக் காட்சியை கல்கும். சந்தனமும் சண்பகமும் மலையை மாண்புறுத்தும். கோங்கும் வேங்கையும் 2. அகத்திணை-நூற்பா 16.