பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.32 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

  • முத்தமிழ் நூல் கற்றார் பிரிவும்கல் லாதார் இணக்கமும்

கைப்பொருளொன் (று) அற்றார் இளமையும் போலக் கொதிக்கும் அருஞ்சுரமே.” என்று கூறியிருக்கும் அருமைப்பாட்டைச் சுவைத்து இன்புறுக. இத்தகைய கொடிய பாலை நிலத்தில் காணலை நீர் என்று மயங்கி யானைகள் அதைப் பருக ஆசைப்படும் கொழுத்திருந்த யானை கள் இளைத்து நிலத்தை உழும் கலப்பை போல் மிருப்பு ஊன்றி கிலத்தில் கிடக்கும். கொடிய வேடர்கள் அங்கு இருப்பர். அவர்கள் கட்டமைந்த உடலையுடையவர்கள் : புலியின் தோற்றத்தையுடைய வர்கள் : சுருண்ட மயிரினையுடையவர்கள்; சுற்றுகள் பொருந்திய வில்லையேந்திய கையினையுடையவர்கள் : வழிப்போக்கர்கள் வரும் சமயம் பார்த்துக்கொண்டு வழிமேல் விழியை வைத்துக் காத்திருப்பவர்கள். அவர்களிடம் பொருள் இல்லாவிட்டாலும் அவர்கள் உடல் துடித்துச் சாதலைக் கண்டு மகிழ்ச்சி கொள்பவர் கள். அத்தகைய கொடிய காட்டில் தன் ஆருயிர்க் காதலன் பிரிந்து செல்வதை எண்ணித் தலைவி வருந்துவதாகப் பாடப்பெறும் பாடல் கள் பிரிவுத்துன்பத்தை மிகைப்படுத்திக் காட்டும் ; அவற்றில் அவலச் சுவை சிறப்பாக அமையும். இந்தத் திணையை அமைத்துச் சிறந்த பாடல்களைப் பாடும் பெருங்கடுங்கோ என்ற புலவர் :பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று அடைமொழியுடன் கூடிய பெயருடன் திகழ்கின்றார். காடு சார்ந்த இடம் : ஊருக்குச் சுற்றுப் புறத்தே இருப்பது காடும் காடுசார்ந்த இடமும், காடுகளில் கார்காலத்தில் மேகங்கள் கருக்கொண்டு ஒலித்துக் குன்றும் காடும் குளிரப் பெய்யும்; பெரிய கரிய மயில்கள் தோகையை விரித்துக்கொண்டு ஆடும். குருக்த மரத்திலிருந்துகொண்டு கிளிகள் மகளிர் போலக் கூவும். மழை பெய்த கானிலத்தில் வெப்பமும் அதிகம் இராது; தட்பமும் மிக்கு இருக்காது. நீரும் கிழிலும் மலிந்து கிடக்கும்: எம்மருங்கும் முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்கும்; அவற்றில் வண்டுகள் மொய்த்துக்கொண்டு இன்னோசையை உண்டாக்கும். மான் தன் பிணையுடன் கூடிப் பள்ளங்களில் கிற்கும் ைேரப் பருகி, இன்புற்றுத் திரியும். முல்லை நிலத்து மக்களாகிய ஆயர்கள் காட்டிடத்தே கன்று காலிகளை மேய்த்துக்கொண்டு, மரநிழலில் தங்கியிருந்து குழல்களில் இனிய பாக்களை இசைத்து ஊதுவர். மாலை நேரத்தில் கன்றும் கறவையும் கொண்டு ஆபர்கள் வீட்டிற்குத் திரும்புவர். அவற்றின் கழுத்தில் கட்டியுள்ள மணி