பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 247

உகரம் பெறுதலும் வல்லெழுத்து மிகுதலும் இதனாற் கொள்ளப்படும்.

       முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் 
       ஞநமத் தோன்றினும் யவவந் தியையினும் 
       முதனிலை யியற்கை என்மனார் புலவர்.       (தொல்,478)
   இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட் பெயரைப் புணர்க்கின்றது. .
   (இ-ள்) ஒன்றென்னுமெண்ணின்முன் வல்லெழுத்து முதன் மொழிவரினும் ஞ, ந, ம, க்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும் யவக்களாகிய இடையெழுத்து முதன்மொழிவரினும் அவ்வொன்றுமுத லொன்பான்கள் முன் எய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர் எ-று.
  (உ-ம்) ஒருகல், சுனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு எனவரும்.
       அதனிலை உயிர்க்கும் யாவரு காலையும் 
       முதனிலை ஒகரம் ஒவா கும்மே 
       ரகரத் துகரந் துவரக் கெடுமே.          (தொல். 479) 

   ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதல்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது.
   (இ-ள்) ஒன்றென்னு மெண்ணின் திரிபாகிய ஒரு என்பதன் முன்னர் உயிர்முதன்மொழியும் யாமுதன்மொழியும் வரு மொழியாய் வருங்காலத்து அம் முதனிலையின் தன்மையாவது ஒகரம் ஒகாரமாய் நீளும், ரகரத்துக்குமேல் நின்ற உகரம் முற்றக்கெட்டு ஒர் என முடியுமென்பதாம்.
   (உ-ம்) ஒரடை, ஒராடை, இலை, உரம், ஊர்தி, எழு ஏணி, ஐயம், ஒழுங்கு, ஒலை, ஒளவியம், ஒர்யானை எனவரும்.
   துவர என்றதனான் இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் செய்யுளகத்து முறையே ஈர், ஈரசை, ஈர் யானை எனவும் மூ, மூவசை, மூயானை யெனவும் முதல் நீண்டு வேறுபட முடிதல் கொள்ளப்படும்.
       இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர் 
       வழங்கியல் மாவென் கிளவி தோன்றின் 
       மகர அளவொடு நிகரலு முரித்தே.          (தொல்.480)