பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


இருந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக

வெளியிட்டுள்ளார்.

    1957ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்’ என்ற நூலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
    1962ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெறுதல்.
    ‘தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுச் சிறப்பித்தது.
    1963ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் இயற்றிய தேவார அருள்முறைத் திரட்டு உரை நூல், வாழ் மங்கலம் அ. மலைப்பெருமாள் முதலியார் மணிவிழா மலர் வெளியீடாக வெளியிடப்பட்டது.
    1970ஆம் ஆண்டு இவரின் சேக்கிழார் நூல்நயம்’ என்னும் சொற்பொழிவு நூலைப் பெரிய புராணச் சொற்பொழிவு நூலில் கழகம் வெளியிட்டுள்ளது.
   திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் இவருக்கு ‘தமிழ்ப் பெரும்புலவர்’ என்ற பட்டத்தை வழங்கியது.
  ‘அற்புதத் திருவந்தாதியுரை என்னும் நூல் ஒரத்துர் குஞ்சித பாதம் பிள்ளை அவர்களின் மணிவிழா மலராக வெளியிடப்பட்டுள்ளது.
   1971ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் ‘திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்” என்ற பட்டம் வழங்கியது.
   தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம் நூல் வெளியிடப்பட்ட து. (சொந்த வெளியீடு).
    1972ஆம் ஆண்டு மகளின் திருமணம். மருமகன் சென்னை சொ. முருகேசனாரின் மகன் திருநாவுக்கரசு. இவர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர்.
   பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
   1973ஆம் ஆண்டுத் திருமந்திர அருள் முறைத் திரட்டு’ என்னும் நூல் தில்லைத் தமிழ் மன்றம் வெளியிட்டுள்ளது.