பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 (இ-ள்) மூன்றிடத்து எழுவாயும் செவிப்புலகைத் தோன்றி நின்று பயனிலே கோடல் செவ்விது என்பர் ஆசிரியர். எனவே அவ்வாறு தோன்ருது நின்று பயனிலை கோடலும் உண்டு, அது செவ்விதன்று. எ-று. (உ-ம்: ) கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும், யான் யாது செய்வல் என்ற வழி இதுசெய் எனவும், இவன் பார் என்றவழிப் படைத்தலேவன் எனவும் செப்பியவழி யான், நீ, இவன் என்னும் எழுவாய் வெளிப் படிாது நின்று செல்வல் இதுசெய், படைத்தலவன் என்னும் பயனில் கொண்டவாறு அறிக. பயனிலைக்கு இருநிலைமையும் ஒதாது எழுவாய்க்கே ஓதுதலாற் பயணிலே வெளிப்பட்டே நிற்கும் என்பதாம். இனி, இச்சூத்திரத்திற்கு, மூன்றிடத்துப் பெயரும் செவிப் புலனுகத் தோன்றிப் பயனிலைப்பட நிற்றல் தன்மையில் திரி யாமை செவ்விது என்பர் ஆசிரியர் எனப் பொருள் கொண்டு, அவ்வியல் நிலேயலாவது பயனிலைகொள்ளுந் தன்மையில் திரியாமை. எவ்வயிற் பெயரும் பயணிலே கோடலிற்றிரியாமை செவ்விதெனவே, அவற்றுட்சில உருபேற்றலாகிய இலக்கணத் திற் செவ்விதாகாமையும் உடைய எனக் கருத்துரைத்து நீயிர் என்பது பெயராயினும் நீயிரை என உருபேலாது? என விளக்கத் தருவர் இளம்பூரணர். இதனைப் போலியுரையென மறுப்பர் (சனவரையர், இளம்பூரணர் உரையினத் தழுவியமைந்தது, 293. நீயிர் நீவிர் நான் எழுவாயல பெரு. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். நீயிர் நீவிர் நான் என்னும் இம் மூன்று பெயரும் எழுவாயுருபினேயொழிய ஏனேயுருபுகளே ஏலா என்பது இதன் பொருளாகும். எல். கூறிய முறையின் உருபு நிலே திரியா தீறுபெயர்க் காகு மியற்கைய என்ப. இஃது உருபு நிற்கும் இடம் கூறுகின்றது.