பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 (இ-ள்) நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அது யாதா யினும் ஒரு பொருளாயினும் அதனையேற்கும் பொருண்மைத் தாகும். எ-று. நான்காவதற்கு உ ம் : அந்தணர்க்கு ஆவைக் கொடுத் தான் எனவரும். மாணுக்கர்க்கு நூற் பொருளுரைத்தான்? எனக் கொடைப் பொருளவாகிய சொல்லானன்றிப் பிற வாய்பாட்டாற் கூறப்படுவனவும் மாணுக்கர்க்கு அறிவு கொடுத்தான்? எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கட் செல்லாது அவன்கண் தோன்றுவதும் ஆகிய பொருள் வகை யெல்லாம் அடங்குதற்கு எப்பொருளாயினும் என்ருர். நட்பு, பகை முதலிய பிற பொருளுமுள வாயினும் அவை யெல்லாவற்றுள்ளும் கோடற்பொருள் சிறப்புடைமையின் எப் பொருளாயினும் கொள்ளும் என்ருர் . என். அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின் நட்பிற் ப ைகயிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியும் அதன்பால வென் மனுர் . இது, நான்காம் வேற்றுமையின் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீருகச் சொல்லப்பட்டவற்றின்கண் அப்பொருள்பட வரும் சொற்களும் உம்மையால் அந்நிகரன பிற பொருட்கண் வரும் சொற்களும் நான்காம் வேற்றுமைப் பாலன. எ-று. உம்மை-எச்சவும்மை. அதற்கு வினையுடைமை-ஒன்றற்கு ஒன்று பயன்படுதல். வினை-ஈண்டு உபகாரம் என்டர் சேன வரையர். உ-ம்: கரும்பிற்கு வேலி.