பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 (உ- ம்) காக்கையிற் கரிது களம்பழம். இதனின் என்பது காக்கை. இற்று என்பது கரிது. இது என்பது களம்பழம். இதனின் இற்று இது? என்னும் வாய்பாடு ஐந்தாம் வேற்றுமைப் பொருள் எல்லாவ்ற்றிற்கும் பொதுவாய் அமைந்துள்ளமையறிக. இதனின் வட்டமிது, இதனின் நெடிதிது, இதனிற் றீவிதிது, இதனிற் றண்ணிது இது, இதனின் வெய்யதிது, இதனின் நன் றிது, இதனிற் றீதிது, இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலிதிது, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இத னின் முதிதிது, இதனின் இளேதிது, இதனிற் சிறந்ததிது, இத னின் இழிந்ததிது, இதனிற் புதிதிது, இதனிற் பழைதிது, இவ னின் இலனிவன், இவனின் உடையணிவன், இதனின் நாறு மிது, இதனிற் பலவிவை, இதனிற் சிலவிவை. இவையெல்லாம் ஒத்த பண்பும் ஒவ்வா வேறுபாடும் பற்றி முறையே உவமப் பொருவும் உறழ்பொருவும் விரித்தற்கேற்றவாறு அமைந்துள் ளமை காண்க பொரூஉப் பொருள் வழக்கிற் பயின்று வருதல் பற்றி அதனே விரித்தார் ஆசிரியர். கள்ளரின் அஞ்சும்’ என் பது அச்சம். வாணிகத்தின் ஆயினுன் என்பது ஆக்கம். ஊரிற் றீர்ந்தான் என்பது தீர்தல். காமத்திற் பற்றுவிட்டான்? என்பது பற்றுவிடுதல். இவை நான்கும் ஒழிந்த ஏனே இருபத்து நான்கும் பொரூஉப் பொருளவாம். அன்ன பிறவும் என்ற தல்ை எல்லேப் பொருளும் ஏதுவும் கொள்க. எல்லே : கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு என் பன. ஏது: முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலேயாது என்பது ? என்பர் இளம்பூரணர். மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரங்க்ளேயும் இளம்பூரண ருரையையும் அடியொற்றி யமைந்தது, 298. ஐந்தா வதனுரு பின்னு மில்லும் நீங்க லொப்பெல்லே யே துப் பொருளே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஐந்தாம் வேற்றுமைக்கு இன்னென்பதும் இல்லென்பதும் உருபாம். நீங்கல், ஒப்பு, எல்லே, ஏதுப் பொருளாகத் தம்மை