பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 ஆசிரியர் தொல்காப்பியனரால் இவ்வியலில் 20, 25, 26, 31, 37-ஆம் சூத்திரங்களில் விளியேலாதனவாக எடுத்தோதப் பட்ட உயர்திணப் பெயர்களையும் அவரால் எடுத்தோதப்படாத அஃறிணைப் பெயர்களையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 313. துவ்வொடு வினுச்சுட் டுற்ற னளர வைதுத் தாந்தா னின்னன விளியா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். நுவ்வையும் எ, யா என்னும் முதல் வினுக்களேயும், அ இ உ என்னும் சுட்டையும் முதலாகவுடைய னகர ளகர ரகரவீற்று உயர்திணைப் பெயர்களும் முற்குறித்த நுதலிய எழுத்துக்களே முதலாகக் கொண்டு வை, து என்பவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களும், தாம், தான், என்னும் பொதுப் பெயர்களும் இவை போல்வன பிறவும் விளியேலா?? என்பது இதன் பொருளாகும்.