பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பொருளும் உணர்த்துவனவாதலால், பொருள் தோறும் வேறு வேறு கரணம் பற்றி வழங்கும் பல்பொருளொரு சொல்லின் வேருயின என்பர் சேவைரையர். ள எடு. அவற்றுள், நான்கே யியற்பெயர் நான்கே சினேப்பெயர் நான் கென மொழிமனர் சினைமுதற் பெயரே முறைப் பெயர்க்கிளவி யிரண்டா கும்மே ஏனப் பெயரே தத்த மரபின. இது, மேல் தொகுத்துரைக்கப்பட்ட விரவுப்பெயர்களே வகுத்து விரிக்கின்றது. (இபள்) மேற்சொல்லப்பட்ட விரவுப்பெயருள் இயற்பெயர் நான்கு வகைப்படும்; சினைப்பெயர் நான்கு வகைப்படும்; சினைமுதற்பெயர் நான்கு வகைப்படும்; முறைப்பெயர் இரண்டு வகைப்படும்; ஏனைய தாம், தான், எல்லாம், நீயிர், நீ என ஒதிய ஐந்தும் தத்தம் இலக்கணத்தன. எ-று. தத்தம் மரபின என்றது, பலபெயர்களைக் குறித்த தொகுதிப் பெயராகாது ஒரொன்ருய் நின்ற தம்மைக்குறித்து வழங்கும் தனிப்பெயர்களாம் என்றவாறு தொகுதிப்பெயர் பதின்ைகும் தனிப்பெயர் ஐந்துமாக விரவுப்பெயர் பத்தொன்பது என்பதாம். ள எசு. அவைதாம், பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் பன்மை யியற்பெய ரொருமை யியற்பெயரென் றந்நான் கென்ப வியற்பெயர் நிலேயே. இஃது இயற்பெயர் நான்கும் இவையென விரித்துக் கூறு கின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட இயற்பெயர்தாம் இருதிணைக் கண்ணும் பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெய ரும், பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும்,