பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 (உ-ம்) அஞ்சினம், அஞ்சினும், அஞ்சினெம், அஞ்சி னேம்; உரிஞனம், உரிஞம்ை, உரிஞனெம், உரிஞனேம் எனவரும். பிறவெழுத்தோடும் ஒட்டிக்கொள்க. கலக்கினம், தெருட்டினம் என்னுந் தொடக்கத்தன குற்றுகரவீருகலான் அதுவும் ஏனே யெழுத்தேயாம்?’ என்பது இறந்தகால எழுத் துக்களைக் குறித்துச் சேவைரையர் தரும் விளக்கமாகும். இறந்தகால வினைச் சொற்களாக இங்கு எடுத்துக்காட்டிய உதாரணங்களைக் கூர்ந்து நோக்குங்கால் நகு-ஆம்=நக்காம் என்ருங்கு உகரவீற்றுக் குறிலிணைப் பகுதி யிரட்டித்து இறந்த காலம் உணர்த்துதலும், உரைத்தேம், உண்டேம், தின்றேம் எனவும் உரிஞனேம் எனவும் த, ட, ற என்னும் ஒற்றுக்களும் இன் என்பதும் இறந்த காலங்காட்டும் இடைநிலேகளாதலும், நக்கனெம், உண்டனெம் என்புழிக் காலஎழுத்தையடுத்துப் பாலுணர்த்தும் ஈருகிய விகுதியைச் சார்ந்துவரும் அன் என்பது சாரியையாதலும், உரைத்தேம் என்புழி உரை என் னும் முதனிலையையடுத்து நிற்கும் தகரவொற்றுக் காலவெழுத் தாகிய தகரம் பகுதியொடு கூடியவழித் தோன்றிய சந்தி எழுத்தென்பதும், நில் + ற்- ஏம் - நின்றேம் எனவரும்வழி பகுதியாகிய லகரவொற்று முன்வரும் கால எழுத்தாகிய றகரத் திற்கு இனமாய னகரவொற்ருகத் திரிந்தமை விகாரமாதலும் இனிது புலம்ை. இவ்வாறு தனிமொழியின் அமைப்பினைக் கூர்ந்துணர்ந்த பவணந்தியார் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறுறுப்பினுள்ளும் சொற் பொருளமைப்புக்கு ஏற்பனவற்றைக் கருதிக்கூட்டி முடிப்ப எவ் வகைப்பட்ட பகுபதங்களும் முடியும் என்பதனை, பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும். (183) என வரும் சூத்திரத்தாற் பகுபதவுறுப்புணர்த்தி, 141. தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை. எனவரும் சூத்திரத்தால் இறந்தகால இடைநிலை இவையென வரையறுத்துணர்த்தியுள்ளார். தகர டகர றகர மெய்களும்,