பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 (இ-ள்) அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய வாய் வரும் மூன்று சொல்லும் பல்லோரையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். எ-று. ரகரவீறு இரண்டும் மூன்று காலமும் பற்றிவரும். அன்னிற் றிற்குரிய காலவெழுத்து அர் ஈற்றிற்கும், ஆணிற்றிற்குரிய கால வெழுத்து ஆர் ஈற்றிற்கும் உரியன. பகரவீறு எதிர்கால முனர்த்தும். பகரவீறு உரிதுப என உகரச்சாரியை பெற்றும், உண்ப எனச் சாரியை பெருதும், உண்குப எனச் சிறு பான்மை குகரச் சாரியை பெற்றும் வரும். (உ-ம்) உண்டனர், உண்ணுநின்றனர், உண்பர் எனவும், உண்டார், உண்ணு நின்ருர், உண்பார் எனவும் வரும். உளன. மாரைக் கிளவியும் பல்லோர் படா ககை காலக் கிளவியொடு முடியு மென்ப. இதுவும் உயர்திணேப் பன்மைக்குரிய ஈறும் அதன் முடிபு வேற்றுமையும் கூறுகின்றது. (இ-ள்) முன்னேயனவேயன்றி மாரீற்றுச் சொல்லும் பல் லோர் படர்க்கையையுணர்த்தும். அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும். எ-று. மார்விகுதி எதிர்காலம் உணர்த்தும். அது உகரச்சாரியை பெற்றும் பெருதும் வரும். (உ-ம்) எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார் என வரும். இனி, பாடன்மார் எமரே, கானன்மார் எமரே எனப் பெயர் கொண்டு முடிவன, பாடுவார், காண்பார் என்னும் ஆரீற்று முற்றுச் சொல்லின் எதிர்மறையாய், ஒருமொழிப் புணர்ச்சியால் மகரம் பெற்று நின்றன எனவும், அவை மாரீருயின் பாடா தொழிவார், காணுதொழிவார் என ஏவற்பொருண்மையை யுணர்த்துமாறில்லே யெனவும் விளக்கந்தருவர் சேனவரையர்.