பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 (இ-ள்) இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள எனச் சொற்பற்றிவரும் ஏழும், பண்புகொள் கிளவி, பண்பிகிைய சினைமுதற் கிளவி, ஒப்பொடு வரூஉங் கிளவி எனப் பொருள்பற்றி வரும் மூன்றும் ஆகப் பத்தும் வினைக்குறிப்புச் சொல்லாம். எ-று. இவற்றுள் பண்புகொள் கிளவி என்பது நிறமுதலிய பண்புணர்த்துஞ் சொல்லேத் தனக்கு முதனிலேயாகக் கொண்டது. பண்பிகிைய சினைமுதற்கிளவி என்பது, மேற்குறித்த பண்பொடு பொருந்திய சினேயொடு முதலேயுணர்த்துஞ் சொல். ஒப்பொடு வரூஉங் கிளவி என்பது, உவமப் பொருள்பற்றி வரும் சொல். (உ-ம்) இன்று - கோடின்று, செவியின்று; இல - கோடில, செவியில; உடைய - கோடுடைய, செவியுடைய, அன்று - நாயன்று, நரியன்று; உடைத்து - கோடுடைத்து, செவியுடைத்து; அல்ல - உழுந்தல்ல, பயறல்ல; பண்புகொள்கிளவி - கரியது, கரிய; áP .Éff - உழுந்துள, பயறுள; பண்பிகிைய சினைமுதற்கிளவி - குறுங்கோட்டது, குறுங்கோட்டன; ஒப்பொடு வரூஉங்கிளவி - பொன்னன்னது, பொன்னன்னன; எனவரும்: மேற்குறித்தவற்றுள் இன்று, இல; உடைதது, உடைய; அன்று, அல்ல, உள என்பன ஒருமையும் பன்மையுமாகிய சொல்நிலையையுணர்த்தின. அல்லன பொருள் நிலேயை யுணர்த் தின. உள என்னும் பன்மைக்கு இல என்னும் பன்மை எதிர் மறையாம். இதற்கு உளது? என்னும் ஒருமையிறு சிறு பான்மையாதலிற் கூறிற்றிலர் உடைத்து’ என்னும் ஒருமையும் 'உடைய’ என்னும் பன்மையும் பெரும்பான்மை உறுப்பின் கிழமையும் பிறிதின் கிழமையும் பற்றிவரும். இன்று, இல என்பன இவ்வுடைமைக்கு மறுதலையாய் நிற்கும். அன்று, அல்ல என்பன முறையே ஒருமையும் பன்மையும் உணர்த்தும்.