பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 தன்மை வினே வினைக்குறிப்பு முற்றும், முன்னிலே வினை வினைக்குறிப்பு முற்றும், வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும், பெயரெச்சவினை வினைக்குறிப்பும், வினே யெச்சவினை வினைக்குறிப்பும் இருதிணைக்கும் பொது வினையாம்?? என்பது இதன் பொருள். பெயரெச்சமாயும் முற்றயும் வரும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச்சொல் ஈரெச்சம் என்பதனுள் பெய ரெச்சமாயடங்குதலானும், செய்ம்மன என்னும் வாய்பாட்டு வினைச்சொல் தம் காலத்துப் பெருகவழங்காமையானும் அவ்விரு வாய்பாடுகளையும் பவணந்தியார் இச் சூத்திரத்து எடுத்தோ தாராயினர். உஉங். அவற்றுள், முன்னிலக்கிளவி இஐ ஆயென வரூஉ மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். இது, முன்னிலையொருமைச் சொற்கள் இருதிணைப் பால்களுக்கு உரியவ மாறு கூறுகின்றது. (இ-ள்) கூறப்பட்ட விரவு வினைகளுள் முன்னிலே வினைச் சொல்லாவது இகர வீறும் ஐகாரவீறும் ஆயிறுமாகிய மூன்றுமாம்; (அவை உயர்திணையுள்) ஒருவனுக்கும் ஒருத்திக்கும் (அஃறிணை யுள்) ஒன்றற்கும் ஒப்பவுரியன. எ-று. இகரம் தடற ஆர்ந்து எதிர்காலம் பற்றிவரும். ஐகாரம் அம்மீற்றிற்குரியனவாக முற்கூறிய எழுத்துப்பெற்றும், ஆயிறு ஆமீற்றிற் குரியனவாக முற்கூறிய எழுத்துப் பெற்றும் மூன்று காலமும் பற்றி வரும். (உ-ம்) உரைத்தி, உண்டி, தின்றி, எ-ம். உண்டனே, உண்ணுநின்றன, உண்பை. எ-ம். உண்டாய், உண்ணு நின்ருய், உண்பாய். எ-ம். வரும் ஒழிந்த எழுத்தோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. ஐய சிறிதென்னை ஊக்கி என இகரம் சிறுபான்மை ககரம் பெற்று வந்தது. இனி, ஒரு காலத்திற்கேயேற்கும் இகரம் முற்கூறினமை யின், உண், தின், கிட, நட, வா, போ என்னுந் தொடக்கத்