பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 உங்.அ. அவற்றுள், செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகரம் அவ்விட, ணறிதல் என்மனர் புலவர். இது, செய்யும் என்பதன் ஈறுகெடுமாறு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள், செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திற்கு ஈற்றின் மேல் நின்ற உகரம் தன்னல் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும். அவ்வாறு கெடுமிடம் அறிக என்பர் ஆசிரியர். எவறு. கெடுமிடம் அறிக என்றது, செய்யும் என்பதன் ஈற்றின் மேல்நின்ற உகரம் எல்லாவிடத்தும் கெடாது; இன்ன இடத்தில் தான் கெடும் எனவரையறுக்கவும் படாது; சான்ருேர் வழக்கி லும் செய்யுளிலும் வந்தவழிக் கண்டுகொள்க என்பதாம். (உ-ம்) வாவும் புரவி, போகும் புழை என்பன, ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட, வாம்புரவி, போம்புழை என நின்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங்கெடும் எனவே, செய்யும் என்னும் முற்றுச் சொல்லுக்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும், மெய் யொழித்துங் கெடுமென்பதாம்’ என்பர் சேவைரையர். (உ-ம்) அம்பலூரும் அவனெடு மொழிமே? சாரல் நாட என் தோழியுங் கலுழ்மே? எனவரும். மொழிமே என்புழி மொழி யம் என்பதன் ஈற்றுமிசையுகரம் யகர மெய்யொடுங் கெட்டமை யும், கலுழ்மே என்புழி ஈற்றுமிசையுகரம் ழகரமெய் கெடாது நிற்பத் தான் கெட்டமையும் காண்க. செய்யுமென்னும் முற்றுக் குரிய இவ்வியல்பினை இச்சூத்திரத்திலுள்ள அவ்விடனறிதல்? என்பதல்ை தழுவிக்கொள்வர் இளம்பூரணர், இச் சூத்திரத்தில் செய்யுமென்னும் பெயரெச்சத்திற்குரிய தாகத் தொல்காப்பியர் கூறிய விதியையும், இது கொண்டு