பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 2 434. கொல்லே யையம் அசைநிலைக் கூற்றே. எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினர். (உ-ம்) இவ்வுருக் குற்றிகொல் மகன்கொல்’ என்பது குற்றியோ மகனே என்னும் பொருள்பட வருதலின் ஐயம். பிரிவெண்ணிப் பொருள்வயிற் பிரிந்த நங்காதலர் வருவர் கொல் வயங்கிழாய்?? (கலித்-11) என்புழிக் கொல் அசை நிலை , உசுக. எல்லே யிலக்கம். (இ-ள்) எல் என்னும் சொல் இலக்கம் (விளக்கம்) என்னும் பொருள்பட வரும் எறு. (உ.ம்) எல்வளை, இலங்கும்வளே என்பது இதன் பொருள். இலக்கம்-விளக்கம். ஒளியாகிய பண்பினைத் தத்தங் குறிப்பா னன்றி வெளிப்படையாக உணர்த்தும் இச்சொல்லே உரிச்சொல் எனக்கொள்ளுதலே பொருத்தமுடையதாகும் என்பது, எல் லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையர்ன் இடைச்சொல்லென்று கோடும்: எனவரும் சேனவரையர் உரையால் இனிது விளங்கும். இடைச்சொல், உரிச்சொல் என்னும் பகுப்பின நுனித் துணர்ந்து இலக்கண நூல் செய்த தொல்காப்பியர், இலக்கமெனப் பொருள்படும் எல்’ என்னும் லகரவீற்று உரிச்சொல்லே இடையி யலிற் கூறியிருத்தல் இயலாது என்பதும், இரங்குதற் பொருட் உாதிய எல்லே என்னும் ஏகார வீற்று இடைச்சொல்லேயே ஆசிரியர் இவ்வியலிற் கூறியிருத்தல் வேண்டும் என்பதும், எல்லேயிரக்கம் எனத் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தில் ரகரத்தை லகரமாகக் கொண்ட பிறழ்ச்சியே இம்மாற்றத்திற்குக் காரணமென்பதும் காலஞ்சென்ற இலக்கணக் கடலஞராகிய அரசஞ்சண்முகனர் ஆராய்ந்து கண்ட உண்மையாகும்.