பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 னென நீரெனத் தீயென வளியென விசும்பென அறியும் பூதம்; பொன்னெடுந் தேரொடுந் தானேயிற் பொலிந்தே என முறையே உம், என்று, என, ஒடு என்னும் எண்ணிடைச் சொற்கள் தொகையின்றி வந்தன. அஃது இன்றியும் இயலும்?? என்னும் உம்மையால் உணவும் உடையும் உறையுளும் மூன்றும் வேண்டும்? எனத்தொகை பெற்று வருதலும் கொள்க. உகக. உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார் . இஃது எண்ணும்மைக்கண் வருவதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) உம்மை எண்ணின்கண் வேற்றுமையுருபு தொகு தலே நீக்கார் ஆசிரியர். எ-று , எனவே உம்மையல்லாத ஏனையெண்ணின்கண் வேற்றுமை யுருபு தொகுதல் நீக்கப்படும் என நியமித்தவாரும். உம்மை எண்: என்றது உம்மை கொடுத்து எண்ணப்படும் தொடரி&ன. உருபு என்றது வேற்றுமையுருபினே. உருபு எனப் பொதுப் படக் கூறினராயினும் ஏற்புழிக்கோடலால் அங்ங்ணம் தொகுதற்குரிய ஐயுருபுங் கண்ணுருபுமே கொள்ளப்படும். (உ-ம்) போட்டும் உரையும் பயிலா ஒருவன் என்ற வழி ஐயுருபும், இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி: என்றவழிக் கண்ணுருபும் தொக்கவாறு காண்க . உகூஉ. உம்முந் தாகு மிடனுமா ருண்டே. இஃது உம் என்னும் இடைச்சொல் திரியுமாறு கூறுகின்றது. (இ.ஸ்) வினைசெயல் மருங்கிற் காலமொடு வரும் இடைச் சொற்களுள் உம் ஈறு உந்து எனத்திரியும் இடமும் உண்டு, কা-g • ஈண்டு உம் என்றது, ஏற்புழிக் கோடலால் செய்யும் என்னும் வாய்பாட்டிற் காலமுணர்த்திவரும் உம்மீற்றின எனக் கொள்வர் உரையாசிரியர். இடனுமாருண்டே என்ற தகுல் இத்திரிபு செய்யுளிடத்துவரும் செய்யுமென்னும் பெயரெச்சத் தின் கண்ணதெனக் கொள்வர் பவணந்திமுனிவர். 21