பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341 புல் மரம் முதலியவற்றை ஒரறிவுயிர் முதலியவாக ஒற்று மைப்பட வழங்கினும் அவற்றின் உடம்பும் உயிரும் தம்முள் வேறுபட்ட இருவேறு பொருள்களே என்பதனை அறிவுறுத்துவது, 450. ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் என வரும் நன்னூற் சூத்திரமாகும். ஒன்றுபட்ட தன்மை யான் ஒன்றுபோலத் தோன்றுவனவாயினும் வேறுபட்ட தன் மையான் உடலும் உயிரும் தம்முள் வேரும் என்பது இதன் பொருளாகும். 'உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்: , (தொல்-பொருள்-8) எனவரும் தொல்காப்பியத்தொடர் உடம்பும் உயிரும் வேறு வேறு பொருள் என்பதனைப் புலப்படுத்துதல் காண்க . உடலுடன் கூடிவாழும் உயிர்களின் குணப்பண்புகளாவன இவையென உணர்த்துவது, 451. அறிவரு ளாசை யச்ச மானம் நிறை பொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல் நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி துணிவழுக்காறன் பெளிமை யெய்த்தல் துன்ப மின்ப மிளமை மூப் பிகல் வென்றி பொச்சாப் பூக்க மறமதம் மறவி யினேய உடல்கொ ளுயிர்க் குணம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும்.

  • அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு, வெறுப்பு, உவப்பு, இரக்கம், நாணம், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு, எளிமை, எய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி என்னும் முப்பத்திரண்டும் இவை போல்வன பிறவும் உடலோடு கூடிவாழும் உயிரின் குணப்பண்புகளாகும்..??