பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 (உ.ம்) அரிமயிர்த் திரண் முன்கை எனவும், கழு விளங்காரம் கவைஇய மார்பே எனவும் வரும். நடடுஅ. துவைத்தலுஞ் சிலேத்தலு மியம்பலு மிரங்கலும் இசைப்பொருட் கிளவி யென்மனர் புலவர். (இ.ஸ்) துவைத்தல், சிலேத்தல், இயம்பல், இரங்கல் என்னும் உரிச் சொற்கள் இசைப் பொருளுணர்த்தும். எ-று. (உ.ம்) வரிவளை துவைப்ப?, ஆமாநல்லேறு சிலேப்ப2, "கடிமரந்தடியுமோசை தன்னுர், நெடுமதில் வரைப்பிற் கடி மனே இயம்ப?, ஏறிரங் கிருளிடை’ எனவரும். இச்சொற்களே, 458. முழக்கிரட்டொலி எனவரும் சூத் திரத்தில் நன்னூலார் எடுத்தாண்டுள்ள மை முன்னர்க் குறிக் கப்பெற்றது. கூடுக.ை அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். (இ-ள்) மேற்குறித்த உரிச் சொற்களுள் இரங்கல் என் பது இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும் உணர்த்தும். எ-று. கழிந்தபொருள் பற்றிவருங் கவலையைக் கழிந்தபொருள் எனக் குறித்தார். (உ-ம்) செய்திரங்கா வினே? எனவரும். ங்சும். இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை. (இ-ள்) இலம்பாடு, ஒற்கம் என்னும் அவ்விரண்டு சொற் களும் வறுமை என்னும் குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) இலம்படு புலவர் ஏற்றகை நிறைய எனவும் ஒக்கல் ஒற்கம் சொலிய எனவும் வரும். * இலம் என்னும் உரிச்சொல், பெரும்பான்மையும் பாடு என்னுந் தொழில்பற்றியல்லது வாராமையின் இலம்பாடு: 23.