பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 (உ-ம்) கடுத்தனளல்லளோ அன்னே? எனவும், கடி மிளகு தின்ற கல்லா மந்தி’ எனவும் கடி என்னுஞ்சொல் முறையே ஐயமும் கரிப்பும் உணர்த்தியது. இவ்விரு சூத்திரப்பொருளேயும் தொகுத்துக் கூறும் முறை யில் அமைந்தது, 446. கடி யென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்கம் அச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யாப்பு வரைவே மன்றல் கரிப்பி குைம். எனவரும். நன்னூற் சூத்திரமாகும். இதன்கண் தொல்காப் பியத்திற் குறிக்கப்படாத விரை, யாப்பு, மன்றல் என்னும் மூன்றும் இடம் பெற்றுள்ளமையும் தொல்காப்பியத்திற் கூறப் பட்ட முன்தேற்று, ஐயம் என்பன இரண்டும் விடப்பெற்றுள் ள்டிையம் காணலாம் . (உ-ம்) கடிமாலே சூடி என்புழி, கடி என்பது விரை -நறுமணம் என்று பொருளில் வத்தது. அருங்கடிப்பெருங் காப்பின் (பட்டினப்-133) என்புழி கடி என்பது யாப்புடைய பெரிய காப்பு என யாப்பு என்னும் பொருளில் வந்தது. இவ்யாப்பு என்பதனை ஆர்ப்பு எனப் பாடங்கொண்டு கடி முரசு-ஆர்ப்புடைய முரசு என உதாரணங்காட்டுவர் சிவஞானமுனிவர். கடிவினே முடிகென நொடியினுள் எனி நனி என்புழி, கடிவினை-மணவினை எனக் கடி என்பது மன்றல் என்னும் பொருளில் வந்தது. க.அடு. ஐ வியப் பாகும். க.அசு, முனேவு முனிவாகும். க.அஎ. வையே கூர்மை. ந.அ.அ. எறுழ்வலி யாகும். (இ.ஸ்) ஐ என்பது வியப்பு உணர்த்தும். முனேவு என்பது முனிவு உணர்த்தும். வை என்பது கூர்மை உணர்த் தும், எறுழ் என்பது வலி உணர்த்தும், எ-று.