பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 வினவின் அவனுக்கு மேலும் மேலும் சொற்களால் பொருள் விளக்குதல் வரையறை யில்லாமற்போம் என்பதாம். ஒரு சொற்கு ஒரு சொல்லாலும் பலசொல்லாலும் பொரு ளுணர்த்தினுலும் உணரும் உணர்வில்லாதனே உணர்த்துமாறு வருஞ்சூத்திரத்தாற் கூறப்படும். ங்கூஉ. பொருட்குத் திரியில்லே யுணர்த்த வல்லின். இது சொற்பொருளுணர்த்துமாறு கூறுகின்றது. (இ~ள்) மாணுக்கர் உணருமாறறிந்து ஆசிரியன் உணர்த்த வல்லனயின் இச்சொல் இப்பொருளினது என்று தான்கூறிய பொருட்குத் திரிபில்லே, எ-று. (உ-ம்) உறுகால்’ என்புழி உறு என்பது மிகுதியென் ருல் உணராத இனக் கடுங்காற்றினது வலி கண்டாய், ஈண்டு உறு என்னும் உரிச் சொல்லால் உணர்த்தப்படுவது? என்று தொடர்மொழி கூறியோ அல்லது கடுங்காற்று வீசுமிடத்து அவனைக்கொண்டு நிறுத்தியோ மானுக்கன் உணரும் வாயில் அறிந்து உணர்த்தவல்லயிைன் அப்பொருள் திரிபுபடாமல் அவன் உணரும் என்பதாம் . இங்ங்னம் அநுபவத்திற் காட்டியுணர்த்தவும் உணராதா னுக்கு அறிவுறுத்த முயலுதல் பய னில் செயலாம் என வுணர்த் துவது வருஞ் சூத்திரமாகும். ங்கங். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. இதுவும் அது. (இ-ள்) வெளிப்படத் தொடர்மொழி கூறியோ அல்லது பொருளே நேரிற் காட்டியோ உணர்த்தவும் உணராதானே உணர்த்தும் வழியில்லை; உணர்ச்சியது வாயில் உணர்வோரது உணர்வினை வலியாக வுடைத்தாகலான். எ-று. யாதானும் ஒரு வழியானும் உணரும் தன்ம்ை ஒருவர் க் கில்லையாயின் அவர்க்கு உணர்த்துதல் பயனில் செயல் என்பதாம்.