பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371 வழி என்ற து, இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினேயினும் மெய்தடுமாறி எனவும், முன்னும் பின்னும் வருபவை நாடி எனவும் முன்னர்க் கூறப்பட்ட சொற்பொருளுணரும் நெறியை ஒம்படை ஆணை என்றது, எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்: எனவும் ஒத்தமொழியாற் புணர்த்தன ருணர்த்தல்?? எனவும் முன்னர்க் கூறப்பட்ட பாதுகாவலாணேயின. உரிச் சொல்லெல்லாம் கூட்ட வரம்பு தமக்கு இன்மையின் வழிகடைப்பிடித்து இயலான் உணர்தல் என வினைமுடிவுசெய்க. இருமை என்பது, கருமையும் பெருமையும் உணர்த்துதலும், சேண் என்பது சேய்மை யுணர்த்துதலும், இவறல் என்பது உலோபம் உணர்த்துதலும், நொறில் என்பது, நொறிலியற் புரவியதியர் கோமான் என துடக்கமும், நொறிலியற் புரவிக் கழற்காலிளேயோர்? என விரைவும் உணர்த்துதலும், தொன்மை என்பது பழமையுணர்த்துதலும், தெவிட்டுதல் அடைதலும், மலிதல் நெருங்குதலும், மாலே குற்றமும் உணர்த்துதலும் பிறவும் இச்சூத்திரத்துக் கிளந்த அல்ல’ என்பதற்ை கொள்ளப்படும். இது போன்று, நன்னூலில் உரியியலுக்குப் புறனடையா யமைந்தது, 459. இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குனிகுணப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே. என வரும் சூத்திரமாகும். இச்சொல் இவ்விடத்து இவ்வாருகும் என்று இலக்கணம் சொல்லும் நூலுள், உலகிலுள்ள பொருள்கட்கும் குணங்கட்கும் இன்னதற்கு இன்னது பெயர் என்று தனித்தனியே கூறலுற்ருல் அவை விரிந்து பெருகுதலின் அவற்றை யாம் இங்குச் சொல்லா தொழிந்தேம். அவற்றைப் பிங்கல முதலான புலவர்களாற் சொல்லப்பட்ட உரிச்சொற் பனுவலாகிய நிகண்டு நூல்களிலே விரும்பி அறிந்து கொள்க’’ என்பது இதன் பொருளாகும்.