பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பேதமுமாய் இவற்றுள்ளேயடங்கும். இவற்றின் மொழிகளும் வந்தவழி அறிந்து கொள்க. 'கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லங் கூவிள மென்னும் எல்லேயின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம் கொங்கணந் துளுவங் குடகங் குன்றம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ் திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடு நிலவாட்சி அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்: என்ருர் அகத்தியனர்?’ எனவரும் மயிலேநாதர் உரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். 'சிங்களம் அந்தோவென்பது; கருநடம் கரைய, சிக்க, குளிர என்பன; தெலுங்கு எருத்தைப் பாண்டில் என்பது; துளு மாமரத்தைக் கொக்கு என்பது ஒழிந்த வற்றிற்கும் வந்துழிக் காண்க: 2 எனவரும் நச்சினர்க்கினியருரை, பதினெண்மொழி களில் தமிழல்லாத ஏனைய பதினேழு மொழிகளிலிருந்தும் தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்னும் நன்னூலார் கருத்தை யொத்து அமைந்திருத்தல் அறியத்தகுவதாகும். சளக. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. இது வடசொல்லாமாறிது வெனக் கூறுகின்றது. (இ~ள்) வடசொற் கிளவியாவது, வடசொற்கே யுரிய வெனப்படும் சிறப்பெழுத்தின் நீங்கி இருசார் மொழிக்கும் பொது வாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். எ-று. வடவெழுத்தாவன உரப்பியும் எடுத்தும் கனைத்துங் கூறத் தோன்றுவனவாகிய ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்தால்