பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40? புலிப்பாய்த்துள் முதலிய உவமத்தொகைகளே விரிக்கு மிடத்துப் புலிப்பாய்த்துளே யொக்கும் பாய்த்துள்’ என இரண்டாமுருபு.விரித்துரைத்தலும் உண்டு. அங்ங்னம் உவமவுரு புடன் வேற்றுமையுருயினேயும் விரித்துரைக்குமிடத்துத் தொகை யினை விரிப்பார் கருத்துக்கேற்ப அத்தொடர் வேற்றுமைத் தொகையெனவும் உவமத்தொகையெனவும் இருதிறமாகக் கூறப் படும். இவ்வாறு உவமவுருபும் வேற்றுமையுருபும் என இரண்டுந் தொக்கனவேனும் புலிப்பாய்த்துள் என்னுந்தொகைக்கு உவமப் பொருளே சிறப்புடைத்தாகலின் உவமத்தொகை யென்றலே பொருத்த முடையதாம் என்பர் இளம்பூரணர். உவமத்தொகையின் இயல்பினே, 365. உவம வுருபில துவமத் தொகையே. என வருஞ் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். 'பண்பு, பயன், வினே, மெய் என்பன பற்றி வரும் உவம வுருபு தோன்ருதது உவமத்தொகையாம் என்பது இதன் பொருள் . உவமவுருபுகளாவன இவையென விளக்கப் போந்த நன்னூ லார் , 8.66. போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இடைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே. எனவரும் சூத்திரத்தால் அவ்வுருபுகளிற் சிலவற்றை எடுத்தோதி யுள்ளார். சகடு. வினேயின் ருெகுதி காலத்தியலும். இது வினைத்தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) வினைச்சொல் தொகுங்கால் காலந்தோன்றத் தொகும் எ-று.