பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441 ஈண்டு உடனிலே என்றது தம்முள் மாறுபட்ட சொற்கள் ஒருங்கு நிற்றலே. (உ-ம்) இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ எனவரும். உடனிற்றற்குரிய வல்லாத சிறுமையும் பெருமையும் உடனின்ற வாறு காண்க . சடுக.ை முன்னத்தி னுணருங் கிளவியு முளவே இன்ன வென்னுஞ் சொன்முறை யான. இது சொற்கண் வருவதோர் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) சொல்லாலன்றிச் சொல்லுவான் குறிப்பாற் பொரு ளுணரப்படுஞ் சொற்களும் உள; இப்பொருள் இத்தன்மையன என்று சொல்லுதற்கண் . எ-று. (உ-ம்) செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணியும் பொன்னும் அணிந்த செவி என்றும், வெளியது உடுத்த சுற்றம் என்றும் குறிப்பால் உணரப்பட்டவாறு கண்டு கொள்க. குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் என்புழி அத்தகைய பெருஞ்செல்வமுடையார் என்பதும் குறிப்பால் உணரப்படும். இச் சூத்திரப் பொருளே இதன் முதலடியாகிய ஒரடியால் உணர்த்துவது, 407. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். சொற்கிடந்தவாறன்றிச் சொல்லுவான் குறிப்பினுல் வேறு பொருள்படவருஞ் சொற்களும் சிலவுளவாம்’ என்பது இதன் பொருள் . சசும். ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார். இது மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்) பொருள் வேறுபாடின்றி ஒரு பொருள் மேல் வரும் இரண்டு சொல் பிரிவின்றிச் தொடர்ந்துவரின், அவற்றை நீக்கார் ஆசிரியர். எ-று.