பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 გ இவையெல்லாம் பொருளால் உயர்திணையவாயினும் சொல் லால் அஃறிணையவாதலின் அதற்கேற்ப அஃறிணை முடிடே கொள்ளுமென்ருர், காலம் உலகம் என்பன வட சொல் லன்று; ஆசிரியர் வட சொற்களே எடுத்தோதி இலக்கணங் கூரு ராகலின் உலகம் என்பது மக்கட் டொகுதியை உணர்த் தியவழி உயர்திணையாயும் இடத்தை உணர்த்தியவழி அஃறிணே யாயும் வருதலின் ஒருசொல் இரு பொருட் கண்ணும் சென்றதெனப்படாது இருசொல்லெனவே படும். அங்ங்ணம் மக்கட் டொகுதியை யுணர்த்துங்க ல் உரிப்பெயராயே உணர்த்திற்று ஆகு பெயரன்று?’ என விளக்கங் கூறுவர் நச்சிஞர்க்கினியர் . மேலென்பது ஏழாம் வேற்றுமைப் பொருளுணர்த்துவ தோர் இடைச்சொல். அஃது ஈறுதிரிந்து மேன என நின்றது. மேற் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட குடிமை ஆண்மை முதலி யன இருதினேக் கண்ணும் செல்லுந் தன்மையவாய் அஃறிணை முடிபு கொள்ளுதலும், இச்சூத்திரத்திற் குறிக்கப் பெறும் காலம் உலகம் முதலாயின உயர் திணைப் பொருளே யுணர்த்தி, அஃறிணை முடிபு கொள்ளுதலும் ஆகிய வேறு பாடுடைய என்பார், உயர்திணை மருங்கின் நிலேயினவாயினும் அஃறிணை மருங்கிற் கிளந் தாங்கியலும்? எனவும் பால் பிரிந் திசையா உயர்தினே மேன எனவும் இவற்றிடையே யமைந்த வேறுபாட்டினைத் தெரித்தோதினுர் ஆசிரியர். டுக.ை நின்ருங் கி ைசத்தல் இவனியல் பின்றே. இது மேற் கூறியவற்றிற்கு ஒர் புறனடை உணர்த்துகின்றது. (இ-ள்) ஈறுதிரியாது நின்றபடியே நின்று உயர்தினையாய் இசைத்தல் (காலமுதலாக) இங்குச் சொல்லப் பட்டவற்றிற்கு இயல்பின்று. எ-று. இவண்-இங்கு; என்றது இங்குச் சொல்லப்பட்ட கால முதலாகிய சொற்களே. இசைத்தல்-பால் பிரிந்திசைத்தல்.