பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு Hණ්’

வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும்

என்றாங்கு, அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை அறிவும் ஈசமும் பெருங்கணோட்டமும் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெறல் அறியார்தின் நிழல்வாழ் வோனே திருவில் அல்லது கொலைவில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப் பிறர்மண் உண்னுஞ் செம்மல் நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது பகைவர் உண்ணா அருமண் ணினையே அம்புதுஞ்சும் கடிஅானால் அறந்துஞ்சும் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை அணையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே." (L410, b-a—0}

'பக்கம் என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற்கெல் லாம் இதுவே ஒத்தாகக் கொள்க.

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஆறு மரபினையுடைய வணிகர் வேளாளர் பக்கமும்".

வணிகர்க்குரிய ஆறுபக்கமாவன:-ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல்.

உதாரணம் “உழுது பயன்கொண் டொலிநிரை ஓம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து-முழுதுனா ஒதி அழல்வழிபட் டோம்பாத கையான் ஆதி வணிகர்க் காசு.” (புறப். வாகை. கo)

1. ஏனோர்’ என்னுஞ்சொல், வணிகர், வேளாளர் என்னும் இருதிறத்தா ரையும் ஒருங்கே குறித்ததெனக் கொண்டு இரு மூன்று மரபு என்பதற்கு அவ்விரு திறத்தார்க்கும் தனித்தனியே உரியனவாக இருவேறு அறுவகைத்தொழில்களை வகுத்துக்கூறுதல் ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகுமா? என்பது ஆராய்த ர் குரியதாகும்.

جستا 3 : سه