பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

轻.母、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தாம் எய்திய தாங்கு அரும் பையுளும்’-சிறைப்பட்டார் தாம் உற்ற பொறுத்தற்கு அரிய துன்பத்தினைக் கூறுங் கூற்றும்.

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தமும்’-கணவனொடு இறந்த செலவை நோக்கிச் செல் வோர் செப்பிய மூதானந்தமும்.

நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்’-மிகுதி மிக்க சுரத்திடைக் கணவனை யிழந்து தனியளாய்த் தலைமகன் வருந்திய முதுபாலையும்.

கழிந்தோர் தேத்து கழிபடர் உlஇ* ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்-செத்தோர்மாட்டுச் சாவாதார் வருத்தமுற்றுப் புலம்பிய கையறு நிலையும்.

காதலி இழந்த தபுதாரநிலையும்."காதலியை இழந்த கணவனது தபுதாரநிலையும்.

காதலன் இழந்த தாபத நிலையும்"-காதலனை இழந்தவள் நிற்கும் தாபத நிலையும்,

1. காமே எய்திய தாங்கரும் டையுளும்’ என் புழி ஏகாரம், தாம் உற்ற

துன் பத்திற்குத் தமது நேழ்சத்தையன்றித் துணையாவார் பிறர் இலச் என்பது பட நின்றயையின் பிரிதிலையேகாரமாகும். தாமேயேங்கிய தாங்கரும்பையுளும்? என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். தாங்கு அரும் பையுள்-பொறுத்தல் அரிய துன்பம்.

‘’துன் பத்திற்கியா ரே துணையாவார் தாமுடைய

நெஞ்சத் துணையல் வழி திருக்குறள் கடிகக) என வரும் தெய்வப் புலவர் வாய்மொழி இத்தொல்காப்பியத் தொடர்ப்பொருளோடு ஒப்புநோக்கு தற்குரியதாகும்.

2. கணவனோடு முடிதலாவது, போர்க்களத்துப்புண்பட்டு வீழ்ந்த கன வ

னோடு . ஒயிர்துறத்தல். டர்ச்சி-செல்லுதல். ஆனந்தம்-சாக்காடு. மூதா அனந்தம்-பெருஞ்சாக்காடு. காஞ்சிக்குரிய இத்துறையினைப் பொதுவியல் என்ற திணை யில் அடக்கு வர் ஐயனாரிதனார்.

3. நனிமிகுசு சம்-(வெம்மை) மிகவும் பெருகிய நடத்தற்கரிய வழி. கணவனை இழத்தலாவது, கன வனது உயிரைக் கூற்றங்கொள்ளப் பறிகொடுத் தல். தனிகள்- ன் னை உ , ன் அழைத்து வந்த கணவனை வழியிடையே யிழந்தமையால் சுற்றத்தார் யாருமின்றித் தனியளாய் நின்றபெண் புலம்புதல்தனிமையுற்று வருந்துதல். பாலை-பிரிவு. முது பாலை-பெரும் பிரிவு; சாக்காடு.

4. கழிந்தோர்-இறந்தோர். கழிபடர்-மிக்கவருத்தம், உlஇ-உற்று. ஒழிந்தோர்-இறவாது எஞ்சியுள்ளோர்.

5. தபுதார நிலை என்பது, தாரம் தபுநிலை என இயையும். தாரம்மனைவி, தபு நிலை-இறந்த நிலை.

5. காதலனாகிய கணவன் இறந்த நிலையில் மனைவிமேற் கொள்ளும் தவ திலை த பதநிலை எனப்படும்.