பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே அ. அ. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

“............... 9°吻曲9磁欧路°*··*物曾*a <·山“4,” ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவால் வள்ளியொடு நகையமர்ந் தன்றே."

(முருகாற்றுப்படை, வரி-க00-கoஉ)

ஆய்வுரை

நூற்பா. உங்.

இதுமுற்கூறிய எட்டுவகையுள் ஒன்றாகிய காமப்பகுதிக்கு எய்தாதது எய்துவித்தது.

(இ. ஸ்) மக்களைப் பொருளாகக் கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப்பொருளாகக்கொண்டு பாடினும் நீக்கார். கடவுளை ஏனைமக்கள் விரும்பியதாகச் செய்யுள் செய் தலும் நீக்கப்படாது. எ-று. மேற்குறித்த இருவகையினையும்

‘கடவுட்பக்கத்தும் ஏனோர் பக்கத்தும் மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கமும்’

(பு. வெ. மா. சூத்-க) எனக் குறிப்பிடுவர் ஐயனாரிதனார். இவ்விருவகையினையும் 'கடவுண்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கம்’ எனவும் ‘கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம் எனவும் முறையே குறிப்பிடுவர் இளம்பூரணர். இவற்றுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயத்தலையும் அமைத்துக்கொள்வர் நச்சி னார்க்கினியர்.

காமம் என்னாது காமப் பகுதி என்றதனானே எழுதினைக் குரிய காமமும் 'காமஞ்சாலா இளமையோள்வயிற்காமமும் அன்றி இது வேறோர் காமம் என்று கொள்க’ என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

கடவுள் என்னும் சொல் தெய்வம் என்னும் பொதுப் பொருளில் மட்டும் அன்றி உலகப்பொருள்களெல்லாவற்றையும் இயக்கி நிற்கும் முழுமுதற்பொருளாகிய இறைவனைக் குறிக்கும் சிறப்பு முறையில் இங்கு ஆளப்பெற்றிருத்தலால், எல்லாம்வல்ல பரம்பொருளைத் தம் ஆருயிர்த் தலைவனாக எண்ணிப் பேரன்பு செய்யும் வழிபாட்டு முறையும் தொல்காப்பியனார் காலத் தமிழ கத்தில் நிலவியிருந்தமை நன்கு தெளியப்படும்.

சைவத் திருமுறையாசிரியர்களாகிய நாயன்மார்களும் நாலா யிரத்திவ்வியப்பிரபந்த ஆசிரியர்களாகிய ஆழ்வார்களும் எல்லாம் வல்ல இறைவனை ஆருயிர் நாயகனாகவும் தம்மை அவனது அருள்வேட்ட தலைவியாகவும் எண்ணிப் போற்றிய ஞான நன்னெறிப் பாடல்களாகிய திருவருளிலக்கியத்திற்கு அரண்