பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ.&() தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

2. மாற்றார் நினைகருதி மாறன் படைமறவர் கூற்றிற் கொதித்தெழுந்தார் கோமான்சீர்-போற்றிக் கயலுயர்த்திக் கொற்றவையைக் கைதொழுதார் தங்கோன் வியனுலகை வென்றாள்க வென்று”

இதில், வெட்சிப் பாடாண் கடவுள் வாழ்த்தொடு மாறன் கயற் “கொடிநிலை தழுவி வருதலறிக.

( ) வெட்சிக் காந்தள் பாடாணாதற்குச் செய்யுள் :

  • வெண்போழ் கடம்பொடு குடி யின்ர்ே ஐதமை பாணி யிiஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெய சேத்தி வேலன் வெறியர் வியன்கலம்' (அகம். கூஅ)

இதில், வெட்சி வகைக் காந்தளில் முருகக் கடவுள் வாழ்த்து வருதலறிக. இன்னும்,

'கடம்பெறிந்து சூர்தடிந்த செவ்வேளின் கைவேல் மடம்பெரியள் சிற்றிடைச்சி வள்ளி-தடவிழிவேற் கஞ்சமகிழ் வோனைவெறி யாடி யயர்வோமால் பஞ்சவன்கோல் பாராள்க வென்று'

எனும் வெண்பாவில், முருகக் கடவுள் வாழ்த்தோடு வெட்சி வகைக் காந்தள்-பாண்டியரின் பாடாணாய் வருதல் காண்க.

3. இனி, முருகனைப் பெண்டிர் பாடிப்பரவும் வெட்சிவகை வள்ளிப் பாடாணாதற்குச் செய்யுள் :

'அமாகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமர்கத்துத் தன்மறந் தாடுங்-குமரன்முன் கார்க்காடு நாறுங் கள்ளிைழைத்துக் காரிகையார் ஏர்க்க:டுங் காளை யிவன்' (நச்-உரைமேற்கோள் ) இதில், பெண்டிர் முருகனைப் பாடும் வள்ளி எனும் வெட்சித் துறை வருதலறிக. இனி, வள்ளிப் பாடாணாய் வருமாறு :

'பெருங்கட் சிறுகுறத்தி பின்மறுகும் சேயோன் அருங்குன்றம் பாடுது நா மன்று-கருங்கடல்மேல் வேல்விடுத்த வேப்பந்தார் மாறன் தமிழ்வேந்தன் கோள்வள் வாழ்த்தெடுத்துக் கொண்டு’

இது மகளிர் முருகனைப் பாடிப் பாண்டியனைப் புகழ்ந்து பரவுதலால், வள்ளிப் பாடிாணாதலறிக,