பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசு தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

னைவரும் நூற்பாவில் தெளிவாகக் குறித்துள்ளார். எனவே அகத் திணையேழனுள் அகன் ஐந்திணைக்கு முன்னும் பின்னும் வைத் துரைக்கப்படும் கைக்கிளை பெருந்திணை என்னும் இருதினை களும் அகத்திணைமருங்கு என அகத்திணையொடும், புறத் திணை மருங்கு எனப் புறத்திணையொடும் இயைத்துரைக்கப் படும் இருவகை நிலைமையினையுடையன என்பதும், அகத்தினை மருங்கு எனப்படும் கைக்கிளை பெருந்திணைகளில் அகனைத் திணையிற்போன்று தலைமக்களது இயற்பெயர் சுட்டப்பெறுதல் இல்லையென்பதும், புறத்திணைமருங்கு எனப்படும் கைக்கிளை பெருந்திணைகளில் புறத்திணையிற்போன்று தலைமக்கள்து இயற் பெயர் பொருந்தி வருதல் உண்டென்பதும் ஆசிரியர் கருத்தாதல் தன்கு துணியப்படும்.

மேற்குறித்தவாறு அகம் புறம் என்னும் இவ்விருதிணைகளை யும் அகத்திணை, அகத்திணைமருங்கு, புறத்திணை, புறத்திணை மருங்கு என நால்வகையாகப் பகுத்துரைக்கும் பெயர் வழக்கம் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருத்தலைக் கூர்ந்துணர்ந்த பிற்கால இலக்கண ஆசிரியர்கள், அகம் புறம் என்னும் இவ்விரு திணைகளையும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நால்வகையாகப் பகுத்துரைத்தனர். எனக் கருதவேண்டியுளது.