பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு சு டு

வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளைநிலையும்-தன்மேல் வருங் கொடிப்படையினைத் தானே தாங்குதல், வாட்டொழிலிற் பொய்த்தலின்றி மாற்றா ரைக்கொன்று தானும் வீழ்தலென இரண்டு یig Lساسان போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண் மையும்:

வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவருமாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலிற் கரந்தையாம்: தும்பையாகாதென்று உணர்க.

இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு.

வாண்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை துரங்க நாட வற்கு அருளிய பிள்ளையாட்டும் வாளாற் பொருது உயர்ந்த அரசிளங்குமரனை அந் நாட்டிலுள்ளோர் கொண்டுவந்து பறை தூங்கிசையாக ஒலிக்கும்படி அவற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும்;

இதுவும் நாட்டிலுள்ளார் கொடுத்தலிற் றன்னுறுதொழிலாய் வழுவுமாயிற்று.

உதாரணம் :

'வன்கண் மறமன்னன் வாண் மலைந்து மேம்பட்ட

புன் றலை யொள்வாட் புதல் வற்கண்-டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வ5 '

என வரும்,

இதனைப் பிள்ளைத்தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு மென்ப.

அனைக்குரி மரபிற் கரந்தையும்-ஆரம ரோட்டல் முதலிய ஏழு துறைக்கும் உரிய மரபினையுடைய கரந்தையும், கரந்தையா

5. கரந்ததைக்குரிய ஏழு துறைகளாவன: ஆரமரோட்டல், ஆபெயர்த்துத் தருதல், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்த ல், வகுதார் தாங்கல், வாள் வாய்த்துக்கவிழ்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல், வாள் மலை ந் தெழுந்தோனை மகிழ்ந்து பறைதுங்க நாடவ ற்கருளிய பிள்ளையாட்டு ö 汾厂班jöTöJ宵Ló。

அனைக்குரிமரபிற்கரத்தை பன்றியும்' என வரும் இவ்வடி இச்சூத்திரத்தின் 18-ஆம் அடியாக அமைந்திருத்தல் வேண்டும் என்பது, ஆரமரோட்டல் முதலிய ஏழு துறைக்கும்.உரிய மரபினை புடைய கரந்தையும்' என வரும் நச்சி னார்க்கினியர் உரைப் பகுதியால் உய்த்துணரப்படும்.

سس6سسه