பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா கம் கஇ

இளம்பூரணம் :

என்-எனின். இது களவின் கண் தலைமகட்குரியதோர் மரபு உணர்த்திற்று.

(இ-ள்.) ஒருதலையுரிமை வேண்டினும் என்பது-ஒருதலையாகத் தலைமகள் உரிமை பூண்டலை வேண்டியவிடத்துமென்றவாறு.

மகடூஉப்பிரித லச்ச முண்மை யானும் என்பது . பிரிதற்கண் வரும் அச்சம் பெண்பாற்கு இயல்பாகு மென்றவாறு.

அம்பலும் அலரும் களவுவெளிப்படுக்குமென்று அஞ்சவந்தவாங் கிருவகையினும் என்பது. களவொழுக்கத்தை வெளிப்படுக்குமென்று அஞ்சும்படியாக வந்த அம்பலும் அலருமாகிய இருவகையின் கண்ணும் என்றவாறு.

நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் என்பது - தலை மகன் வரவு பார்த்திருந்தவழி வந்த இடையூறாகிய பொருளின் கண்ணும் என்றவாறு.

அவையாவன :- தாய் துஞ்சாமை நிலவு வெளிப்படுதல் முதலியன.

போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்பது - தலை மகனுடன் போதற் குறிப்பும் வரைவுகடாதற் குறிப்பும் மனைவி மாட்டுத் தோன்றும் என்றவாறு."

'சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப

1. ஒருதலை-உறுதி. பிரிதல் அச்சம் மகடூஉக்கு உண்மையானும் என இயையும். மகடூஉ-பெண்., என்றது தலைவியை. மகடூஉ வுக்கு என நான்காமுரு பு விரித்துரைக்க. அம்பல்-அரும்பல், களவில் தலைவனொடு தலைவிக்குளதாகிய தொடர்பு முகிழாய்ப் புறத்தார்க்குக்குறிப்பிற் புலப்படுதல் அலர்தல்-சொல்லாக விரிதல். மனைவிகள் போக்கும் வரைவும் தோன்றும் என இயையும். போக்குதலைவனுடன் போதல் வேண்டும் என்ற மனக் குறிப்பு. வரைவு-வரைவுகடாதற் குறிப்பு. ஏன் இன்னும் மணஞ்செய்து கொள்ளவில்லை' எனத் தலைவனை வேட்கையுற்று வினவும் குறிப்பு.