பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகல் தொல் காப்பியம் - பொருளதிகாரம்

ஒரு சார் கூற்றுவகையுணர்த்துகின்றது.

(இ-ள்) மங்கலம் அல்லாத தனை மங்கலமரபினால் மறைத்துக் கூறும் சொல் வகையும். அவையிற் கூறத் தகாத இடக்கர் பபொருளை அடககிக் கூறும் சொல் வகையும், தன்னிக ரில்லாத ஆண்மை காரணம்ாகக் கூ றப்படும் சொல்வகையும் ஆகிய இவையெல்லாம் (சொல்லால் வெளிப்படப்பொருள் தராது) மறைத்துக் கூறுங் குறிப்புடையனவாய் மேற்குறித்த உள்ளுரை போன்று கொள்ளப்படும் என்பர் ஆசிரியர். (எ-று)

சொல்லதிகாரத்தில் தகு திய வழக்கின்பாற்பகுத்துரைக் கப் படும் மங்கல மொழி இடக்கரடக கல் என்பன தனி மொழிகள் எனவும் இங்குக் கூறப்படுவன தொடர் மொழிகளாகிய கூற்று வகைகள் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.

உச.உ. அன்னை என்னை என்றலும் உளவே

தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினுந் தோன்றா மரபின என்மனார் புலவர்.

இனம் பூரணம் :

என்-எனின் இதுவுமொருசார் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அன்னை என்னை என்றுசொல்லுதலும் உள-அவை

முன்புள்ளார் சொல்லிப்போந்த முறைமை அவை தாம் சொல்

லினா னும் சொல்லிற் கங்கமாகிய எழுத்தினானும் பொருள் தோன் றாத மரபினையுடைய என்றவாறு. • .

எழுத்தென்பது எழுத்தாகப் பிரித்தாற் படும் பொருள் வேறு பாடு இவை அகத்தினும் புறத்தினும் வரும்.

"ஒரீஇ ஒழுகு மென்னைக்குப்

பரியலென் மன் யான் பண்டொரு காலே.' (குறுந், உ0:)

என்பது தோழிக்குக் கூறியது,

"அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்.' என்பது தோழிக்குக் கூறியது.

1. இச்சொல்வழக்கு அகத்தினையொழுகலாற்றிற் பயின்று வருதல்போன்று புறத்திணையிலும் வருதலுண்டு என் பார் 'இவை அகத்தினும் புறத்தினும் - என்றார் இளம் பூரணர்.

(குறுந். க.க )

வரும்: