பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா டுக 卒岛竺

"என்னை முன் நில்லன் மின் தெவ்விர் பலரென்னை

முன் னின்று கன்னின் றவர்.' (குறள், எ எக)

"என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே..'

(புறம் . அச)

இவையும் என்றலும்' என்ற வும்மையால் (இந்) நிகரனவுங் கொள்க.

'எந்தைதன் உள்ளங் குறைபடா வாறு.'

என வரும் . (திக)

நச்சினார்க்கினியம் :

இது, முறைப்பெயர்பற்றி வருவதோர் வழுவமைக்கின்றது.

(இ-ள்.) சொல்லினும் எழுத்தினுந் தோன்றா மரபின - சொல்லோத் இனும் எழுத்தோத்தினுஞ் சொல்லப்படாத இலக் கணத்தனவாய; தொல் நெறி முறைமை - புலனெறி வழக்கிற். குப் பொருந்திய பழைய நெறிமுறைமையானே : அன்னை என்ஐ என்றலும் உள என்மனார் புலவர் தோழி தலைவியை அன்னையென்றலும் தலைவி தோழியை அன்னையென்றலும் இருவருந் தலைவனை என் ஐ யென்றலும் உளவென்று கூறுவர் புலவர் (எ று.)"

"அன்னாய் இவனோர் இளமா னாக்கன்.' (குறுந். 33)

'புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்.” (குறுந், 15 0)

இவை தோழியைத் தலைவி அன்னாயென்றன.

'அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

1. அன்னை என்பது தாய் என்னும் பொருளில் வழங்குதற்குரிய முறைப்பெயர்.

என்னை என்பது என் தலைவன், என் தமையன் என்ற பொருள்களில் வழங்குதற்குரிய முறைப்பெயர். இம்முறையமைப்பு சொல்லிலக்கணத்திலும் எழுத்திலக் கனத் தி லும் தோன்றும் மரபாகும். இம் மரபினைக் கருதாது தோழிதலைவியை அன்னை யென்றலும் தலைவி தோழியை அன்னை யென்றலும் இருவரும் தலைவனை என்னையென்றலும் உள. இவை சொல்லதிகாரத்தும் எழுத்ததிகாரத் தும் சொல்லப் படாத இலக்கணத்தவாய்ப் புலனெறி வழக்காகிய செய்யுட்களில் தொன் றுதொட்டு வழங்கிவரும் பழைய நெறிமுறையினவாதலால், இவை வழுவிலவாக அமைத்துக் கோள்ளத்தக்கன என்பதாம். சொல், எழுத்து என்பன இங்கு ஆகுபெயராய் அவற்றின் இலக்கணம் உணர்த்தும் சொல்ல்திகாரத்தையும் எழுத்ததிகாரத்தையும் உணர்த்துகின்றன.