பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா உ శీ;

(இ-ன்.) நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமன் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ' ஒட்டிய உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் என்பது-துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் குறித்த மரபு இடையீடுபடுதலான் மெய்ப்பரிவு எட்டாகிய எட்டன் பகுதியும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும் நெஞ்சொடு புணர்த்துக் கூறியும் என்றவாறு.

'காமங்கண்ணிய என்றதனால் அகப்பொருளாகிய காமமும் புறப்பொருளாகிய காமமும் கொள்ளப்படும். இடைதெரிய’

என்பதனை,

'இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்’ (நாலடி. டுச)

என்றாற் போலக் கொள்க. தெரிய' என்னும் செயவெனெச்சம் ஏதுப் பொருண்மை குறித்துநின்றது. மெய்ப்பாடு எட்டாவது :நகை, அழுகை, உவகை. இளிவரல், அச்சம். பெருமிதம், மருட்கை வெகுளி ; இவற்றின் பகுதி மெய்ப்பாட்டியலுட் காண்க. இம் மெய்ப்பாடு உறுப்புடையதுபோலச் சொல்லப்பட்ட நேஞ்சின்கட் புலப்பட என்றவாறு.

சொல்லா மரபினவற்றொடு கெழிஇச் செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்கியும் என்பது-சொல்லாத மரபினையுடையவற் றோடு கெழுமி அவை செய்யாத மரபை யாண்டுப் படுத்தியவற்றை யும் நெஞ்சினைப் போல அடக்கியும் என்றவாறு.

சொல்லாமரபின ஆவண-புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின. செய்யா மரபாவன-துதாச் சேறலும் வருதலும் உளபோலக்கூறும் அவைபோல்வனவும் பிறவும்:

1. எட்டன்பகுதியும் விளங்க-எண்வகை மெய்ப்பாடுகளும் உறுப்புடையது

போற்கூறப்பட்ட கெஞ்சின் கண் விளங்க.