பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா உ & ද්

அவற்றுள் நெஞ்சொடு புணர்த்தற்கு உதாரணம்:

'கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்

பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்தன் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ தாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்திங் கிளவிக் குறுமகள் மென்தோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே."

(அகம்.க)

என்பது உறுப்புடையதுபோல உவகைபற்றி வந்தது.

"சென்றதுகொல் போத்ததுகொல் செவ்வி பெறுத்

துணையும்

நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி-முன்றில் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு உழந்து பின் சென்றளன் நெஞ்சு'(முத்தொள்ளாயிரம்.க)

இது அவலம்பற்றி நெஞ்சினை உறுப்புடையதுபோற் கறிய பெண் பாற் கூற்று.

'உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் ந்ெஞ்சஞ்

செல்லல் தீர்கஞ் செல்வா மென்னும்."(நற்றிணை.உ.ச)

என்றவழி உணர்வுடையது போல் இளிவரல் பற்றிவந்த தலை மகன் கூற்று.

'குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவி வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறு உங் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோற் கல்ல லுறீஇயர் சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவா தொருங்குவரல் நசையொடு வருந்துஇ கொல்லோ அகுளா னாகலின் அழிந்திவண் வந்து தொன்னலன் இழந்தஎன் பொன்னிறம் தோக்கி ஏதி லாட்டி இவளெனப் போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே."

(நற்றினை திசு)