பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசு தொல்காப்பியம்-பொருளதிகாரம்

'யாவது முயங்கல் பெறுகுவனல்லன்

புலவி கொளிஇயர் தன் மலையினும் பெரிதே.”

இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது.

கடம்புங் களிறும் பாடித் தொடங்கு பு தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலும் ஆடிப் பாடினாளாக நன்றே’’ (அகம்.137)

என்பது தலைவர்க்கு வெறியாட்டுணர்த்தியது.

வரைதல் வேட்கைப் பொருள என்ப-தலைவன் வரைந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாகவுடைய என்றவாறு.

என்ற து, வழுப்படக் கூறினும் வரைவு காரணத்தாற் கூற லின் அமைக்க வென்றவாறாம். (கசு)

ஆய்வுரை: இது, மேற் களவியலில் தோழி கூற்றுக்களைத் தொகுததுணர்த்தும் உச-ஆம் சூத்திரத்து, "ஆற்றது.தீமை யறிவுறு கலக்கம் முதல், "அனைநிலை வகையால் வரைதல் வேண்டி னும்’ என்பதிராகக் கூறப்பட்ட சில கிளவிகளுக்குப் பயன் உணர்த்துகின்றது.

(இ-ள்) களவொழுக்கத்துத் தலைமகன் வரும் காலமும் வழியும் ஊரிடையுளதாங்காவலும் ஆகியவற்றைத் தப் பியொழுக வால் உளதாகுந் தீமைகளை எடுத்துக்காட்டலும், தான் நெளு சழிந்து கூறுதலும் தலைமகனுக்கு உண்டாகும் இடையூற்றினைக் கூறுதலும், தலைவனைப் பகற்குறி விலக்கி இரவில் வருக என்ற லும், இரவும் பகலும் இங்குவாரா தொழி.க எனக் கூறுதலும், நன் மையாகவும் தீமையாகவும் பிறபொருளையெடுத்துக்காட்டலும, பிறவுமாக இங்ங்னம் தலைவனது உயர்ச்சிகெடத் தோழி கூறுளு சொற்கள் யாவும் தலைமகட்குத் தலைமகன்பால் விருப்பமின்மை யாற் கூறப்பட்டன அல்ல., தலைமகளை அவன் விரைவில் மணந்து கொள்ளுதல் வேண்டும் என்னும் வேட்கையினைப் பொரு ளாகவுடைய சொற்களாம். எ-று.

புரை-உயர்ச்சி. படுதல்-கெடுதல். புரைபட வருதலாவது, தலைமகனது உயர்ச்சிகெடும்படி இன்னவாறு செய்க இன்னவாறு செய்யற்க’ என விதித்தும் விலக்கியும் தலைவனைப் பணிகொள்ளு