பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

టీ { శ్రీధి தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங் காதலர்

வருவர்கொல்? வயங்கிழாஅய்! வலிப்பல்யான்

கேஎளினி' (கலி. 11)

எனுங் கலியடியு மதுவேயாம்.

(5) பசியட நிற்ற" லாவது, தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்.

'இனியான், உண்ணலும் உண்ணேன், வாழலும்

வாழேன்,

தோணல முண்டு துறக்கப் பட்டோர் வேணி ருண்ட குடையோ ரன்னர்' (கலி, 23)

எனுங் கலியடியும்,

'... ... ... ... ... நின்மகள்

பாலு முண்ணான், பழங்கண் கொண்டு தனிபசந் தனள் என வினவுதி' (அகம். 48)

எனும் அகப்பாட்டடிகளும் பசியடும் காதலியல் கு றி த் த ல் காண்க.

(6) பசலைபாய்தல்' என்பது, கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற்நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு.

"யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை, திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ." (ஐங்குறு. 231)

எனக்கு மாகாது, என்னைக்கு முதவாது, பசலை யுணி இயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமைக் கவினே." (குறுந் 27)

இவை பசலைபாயும் காதலியல்பு குறிப்பனவாகும்.